×

கோயில் கும்பாபிஷேகம் நடத்துவதில் பிரச்னை

 

திட்டக்குடி, ஆக. 23: திட்டக்குடி அடுத்துள்ள தொளார் ஊராட்சிக்கு உட்பட்ட புத்தேரி கிராமத்தில் செல்வ விநாயகர் மற்றும் வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. இதில் செல்வ விநாயகர் கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்று சுமார் 12 ஆண்டுகள் ஆகிவிட்டதால் மீண்டும் கோயிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த புத்தேரி கிராம பொதுமக்கள் ஏற்பாடு செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அதே கிராமத்தை சேர்ந்த மற்றொரு தரப்பினர் இந்து அறநிலையத்துறையிடம் அனுமதி பெறாமல், பொதுமக்களிடம் வரி வசூல் செய்து கோயிலை இடித்துவிட்டு திருப்பணி மேற்கொண்டு கும்பாபிஷேகம் நடத்துவதற்கு தன்னிச்சையாக செயல்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து ஒரு தரப்பினர் ஆவினங்குடி காவல் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின்பேரில் போலீசார் திட்டக்குடி இன்ஸ்பெக்டர் சீனிபாபு, அறநிலைய துறை ஆய்வாளர் தமிழ்ச்செல்வி ஆகியோர் இருதரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை செய்தனர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் இன்று (23ம் தேதி) திட்டக்குடி தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் முன்னிலையில் இருதரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தெரிவித்தனர். அதுவரை எந்த பிரச்னையிலும் ஈடுபடக்கூடாது என இரு தரப்பினரிடமும் எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு உடையது.

The post கோயில் கும்பாபிஷேகம் நடத்துவதில் பிரச்னை appeared first on Dinakaran.

Tags : Phetakkudi ,Selva Vinayak ,Varadharaja ,Butheri ,Tholar Panchayat ,Thitakudy ,Kumbabhishekam ,
× RELATED பொதுமக்கள் சாலை மறியல்