×

அழகப்பா பல்கலையில் ஸ்கூபா டைவிங் முதுகலை பட்டயப்படிப்பு

காரைக்குடி, ஆக.23: காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகமும், புதுச்சேரி டெம்பிள் அட்வெஞ்சர்ஸ் ஸ்கூபா டைவிங் அகாடமியும் இணைந்து துணைவேந்தர் பேராசிரியர் ஜி.ரவி தலைமையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதுகுறித்து துணைவேந்தர் பேராசிரியர் ஜி.ரவி கூறுகையில், ஸ்கூபா டைவிங் அகாடமி என்ற ஆழ்கடல் நீச்சல் பயிற்சி நிறுவனத்துடன் இணைந்து புரிர்துணவு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் அழகப்பா பல்கலைக்கழக கடலியல் மற்றும் கடலோரவியல் துறை மாணவர்கள் தங்களின் முதுகலை பட்டப்படிப்புடன் கூடுதலாக ஸ்கூபா டைவிங் முதுகலை பட்டயப் படிப்பு (பிஜி டிப்ளமோ இன் ஸ்கூபா டைவிங்) மேற்கொள்வார்கள்.

இப்பயிற்சியின் மூலம் ஆழ்கடல் தன்மை, கடல் வாழ் உயிர்களின் வாழ்வியல் மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாட்டை கண்டறிவது. அழிந்து வரும் கடல் வாழ் உயிரினங்கள் கடல் பசு, கடல் ஆமை, கடற்குதிரை பாதுகாப்பது. பவளப்பாறை மற்றும் அவற்றை சார்ந்த கடல் வாழ் உயிரினங்களின் பாதிப்பு பற்றி அறிந்து கொள்ளவும், தொல்லியல் துறை சார்ந்த கடல் சார் ஆராய்ச்சிகள் மேற்கொள்ள ஆழ்கடல் பயிற்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றார். நிகழ்ச்சியில் பதிவாளர் பேராசிரியர் ராஜமோகன், புதுச்சேரி டெம்பிள் அட்வென்சர் நிறுவனர் அரவிந்த் தருண் , கடலியல் மற்றும் கடலோரவியல் துறை தலைவர் பேராசிரியர் ரவிக்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

The post அழகப்பா பல்கலையில் ஸ்கூபா டைவிங் முதுகலை பட்டயப்படிப்பு appeared first on Dinakaran.

Tags : Alagappa University ,Karaikudi ,Karaikudi Alagappa University ,Puducherry Temple Adventures Scuba Diving Academy ,Prof. ,G. Ravi ,
× RELATED தேசிய வீல்சேர் கிரிக்கெட் போட்டி மகாராஷ்டிரா அணி முதலிடம்