×

800 மாணவ, மாணவிகள் பங்கேற்ற ஜெனிவா ஒப்பந்த தின பேரணி

திருவாரூர், ஆக. 23: திருவாரூரில் 800 மாணவ, மாணவிகள் பங்கேற்ற ஜெனிவா ஒப்பந்த தின பேரணியை கலெக்டர் சாரு துவக்கி வைத்தார். இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி திருவாரூர் மாவட்டக் கிளை ஜூனியர் ரெட்கிராஸ் மற்றும் யூத் ரெட்கிராஸ் இணைந்து நடத்திய ஜெனிவா ஒப்பந்ததின விழா பேரணியை திருவாரூர் புதிய ரயில் நிலையத்தில் கலெக்டர் சாரு கொடியசைத்து துவக்கி வைத்தார். பின்னர் மாவட்ட கலெக்டர் சாரு பேசுகையில், ரெட்கிராஸ் இயக்கம் என்பது ஒரு அகில உலக சேவை அமைப்பாகும். போர்காலத்தில் காயமுற்றோருக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் உதவ உருவாக்கப்பட்டது. நாளடைவில் பேரிடர் காலங்களிலும், இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் உதவி புரிந்து வருகிறது.

ரெட்கிராஸ் இயக்கம் 7 அடிப்படை கொள்கைகளை கொண்டு செயல்படுகிறது. ரெட்கிராஸ் இயக்கம் உருவாக்கிய மனிதநேய சட்டங்கள், 1949ம் ஆண்டு 200 உலகநாடுகள் கையெழுத்திட்ட ஜெனிவா ஒப்பந்தங்களாக வடிவம் பெற்றது. உலகநாடுகளில் உள்ள அனைத்து ரெட்கிராஸ் சங்கங்களும் ஒவ்வொரு ஆண்டும் ஜெனிவா ஒப்பந்த தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி திருவாரூர் மாவட்டக் கிளை சார்பில் ஜெனிவா ஒப்பந்த தினத்தை முன்னிட்டு பள்ளி, ஜே.ஆர்.சி மாணவ, மாணவிகள் மற்றும் கல்லூரி ஓய்.ஆர்.சி மாணவ, மாணவிகள் சுமார் 800 பேர் பங்கேற்ற ஜெனிவா ஒப்பந்த தின பேரணியானது, தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கலெக்டர் சாரு தெரிவித்துள்ளார்.

ரயில் நிலையத்திலிருந்து துவங்கிய பேரணியானது பனகல் சாலை மற்றும் தெற்குவீதி வழியாக வ.சோ.ஆண்கள் மேல்நிலைப்பள்ளியை வந்தடைந்தது. நிகழ்ச்சியில் ஆர்.டி.ஓ சங்கீதா, முதன்மைக்கல்வி அலுவலர் புகழேந்தி, ரெட் கிராஸ் சொசைட்டி தலைவர் ராஜகுமார், பொருளாளர் பாலு, செயலாளர் வரதராஜன், தாசில்தார் நக்கீரன் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

The post 800 மாணவ, மாணவிகள் பங்கேற்ற ஜெனிவா ஒப்பந்த தின பேரணி appeared first on Dinakaran.

Tags : Geneva Convention Day rally ,Tiruvarur ,Thiruvarur ,Charu ,Dinakaran ,
× RELATED தொழில்நுட்ப கோளாறுகளை சரி செய்து...