×

பாகிஸ்தானில் கம்பி அறுந்ததால் பரபரப்பு 900 அடி உயரத்தில் தொங்கும் கேபிள் கார் 6 குழந்தைகள், 2 ஆசிரியர்கள் சிக்கித்தவிப்பு

பெஷாவர்: பாகிஸ்தானின் வடமேற்கில் பள்ளத்தாக்கில் அந்தரத்தில் கேபிள் காரில் சிக்கிய ஆறு மாணவர்கள் உள்பட 8 பேரை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் வடமேற்கில் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள பட்டாகிராம் மாவட்டத்தில் அல்லாய் பள்ளத்தாக்கில் உள்ள கிராமத்தில் இருந்து தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் தாம்டோர் நகருக்கு செல்வதற்கு, 900 அடி உயரம் உள்ள குல் தோக் கேபிள் காரில் பயணம் செய்கிறார்கள்.

நேற்று காலை 8 மணி அளவில் அந்தரத்தில் கேபிள் கார் சென்று கொண்டிருக்கும் போது கேபிள் உடைந்ததால் கேபிள் கார் அந்தரத்தில் தொங்கியது. இதில் பயணம் செய்த 6 மாணவர்கள், 2 ஆசிரியர்கள் 900 அடி உயரத்தில் கேபிள் காரில் சிக்கிக் கொண்டனர். அவர்களை மீட்கும் பணியில் தற்போது ராணுவம் ஈடுபடுத்தப்பட்டு உள்ளது. 10 மணி நேர போராட்டத்திற்கு பிறகு 2 குழந்தைகள் மீட்கப்பட்டனர். 6 பேர் இன்னும் சிக்கித்தவிக்கிறார்கள். அவர்களை மீட்கும் பணியில் ராணுவம் தொடர்ந்து ஈடுபட்டுள்ளது.

The post பாகிஸ்தானில் கம்பி அறுந்ததால் பரபரப்பு 900 அடி உயரத்தில் தொங்கும் கேபிள் கார் 6 குழந்தைகள், 2 ஆசிரியர்கள் சிக்கித்தவிப்பு appeared first on Dinakaran.

Tags : Pakistan ,Peshawar ,Dinakaran ,
× RELATED பாக்.கிற்கு உருவாக்கிய முதல் நீர்மூழ்கி கப்பலை அறிமுகம் செய்தது சீனா