![]()
மும்பை: நாடு முழுவதும் வெங்காயம் விலை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில்தான் இரண்டு அல்லது நான்கு நாட்களுக்கு வெங்காயம் சாப்பிடாவிட்டால் ஒன்றும் ஆகிவிடாது என்றும் மகாராஷ்டிரா மாநில பொதுப்பணித்துறை அமைச்சர் தாதா புசே தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது: சிலர் ரூ.10 லட்சம் மதிப்புள்ள கார்களை பயன்படுத்துகிறார்கள். அவர்களால் ரூ.10 அல்லது ரூ.20 அதிக விலை கொடுத்து வெங்காயத்தை வாங்க முடியும்.
சிலருக்கு அதிக விலை கொடுத்து வெங்காயத்தை வாங்க முடியாது. அப்படிப்பட்டவர்கள் இரண்டு அல்லது நான்கு மாதங்களுக்கு வெங்காயம் சாப்பிடாமல் இருந்தால் ஒன்றும் ஆகிவிடாது. சமயங்களில் ஒரு குவிண்டால் வெங்காயத்தின் விலை ரூ.200 ஆக இருக்கும். வேறு சமயங்களில் ரூ.2,000 ஆக இருக்கும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.
The post 4 மாசம் வெங்காயம் சாப்பிடலேன்னா ஒண்ணும் குடிமுழுகிப் போய்விடாது: மகாராஷ்டிரா அமைச்சர் கருத்தால் சர்ச்சை appeared first on Dinakaran.
