×

ரூ2.28 கோடியில் சாயச்சாலை கட்டிடங்கள் திறப்பு

சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த்துறை சார்பில் திருநெல்வேலியில் ரூ.4 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸின் வணிக வளாகம், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் ரூ.1 கோடியே 50 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையம் ஆகியவற்றை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

மேலும், நெசவாளர்களுக்கு வழங்கப்படும் நூலை தரமான முறையில் சாயமிட்டு வழங்க ஏதுவாக, ரூ.2 கோடியே 28 லட்சத்து 54 ஆயிரம் செலவில் அமைக்கப்பட்ட விருதுநகர், மதுரை, சிவகங்கை மாவட்டங்களில் சாயக்கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்துடன் கூடிய சாயச்சாலை கட்டிடங்களையும் முதல்வர் திறந்து வைத்தார்.

The post ரூ2.28 கோடியில் சாயச்சாலை கட்டிடங்கள் திறப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chennai Chief ,Secretariat ,Handloom, Handicrafts, Textiles and Khadar department ,
× RELATED குடிநீர் பிரச்னையை தீர்க்க உடனடியாக...