×

அம்மா உணவகங்களில் புகைப்படங்கள் வைப்பது அரசின் கொள்கை முடிவு: ஜெயலலிதா படம் வைக்க கோரிய மனு தள்ளுபடி

மதுரை: அதிமுக கொள்கை விளக்க அணி துணைச் செயலாளர் பாப்புலர் முத்தையா, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘ தமிழகத்தில் ஏராளமான அம்மா உணவகங்கள் திறக்கப்பட்டுள்ளன. இங்கு ஜெயலலிதாவின் புகைப்படம் வைக்கப்பட்டிருந்தது. நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியிலுள்ள அம்மா உணவகங்களில் இருந்த ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிசாமியின் புகைப்படங்கள் அகற்றப்பட்டுள்ளன. அவற்றை மீண்டும் வைக்குமாறு உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. மாநகராட்சி தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீராகதிரவன் ஆஜராகி, ‘‘அம்மா உணவகங்களில் புகைப்படம் வைப்பது சம்பந்தமாக எந்த விதிகளும் இல்லை. புகைப்படங்கள் வைப்பது அரசின் கொள்கை முடிவு. இதற்கெல்லாம் ரிட் மனு தாக்கல் செய்ய முடியாது.’’ என்றார். இதையடுத்து, அரசின் கொள்கை முடிவில் தலையிட வேண்டியதில்லை எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். …

The post அம்மா உணவகங்களில் புகைப்படங்கள் வைப்பது அரசின் கொள்கை முடிவு: ஜெயலலிதா படம் வைக்க கோரிய மனு தள்ளுபடி appeared first on Dinakaran.

Tags : Government ,Amma ,Jayalalithaa ,Madurai ,AIADMK Policy Briefing ,Deputy Secretary ,Popular Muthiah ,ICourt Madurai ,
× RELATED புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை