ஆடி நிறுவனம் புதிய கியூ8 இ-டிரான் என்ற காரை கடந்த வாரம் அறிவித்திருந்தது. இதில் 50 மற்றும் 55 என 2 டிரிம்கள் உள்ளன. 50 டிரிம்மில் 95 கிலோவாட் அவர் பேட்டரி மற்றும் டூயல் மோட்டார் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 340 எச்பி பவரையும் 664 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். ஒரு முறை சார்ஜ் செய்தால் 491 கி.மீ தூரம் வரை செல்லலாம். இதுபோல் 55 டிரிம்மில் 114 கிலோவாட் அவர் பேட்டரி உள்ளது. அதிகபட்சமாக 408 எச்பி பவரையும், 664 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். அதிகபட்சம் 600 கி.மீ தூரம் வரை செல்லலாம்.
இந்த கார் நேற்று முன்தினம் அதிகாரப்பூர்வமாக சந்தைப்படுத்தப்பட்டு விலை விவரம் அறிவிக்கப்பட்டது. இதன்படி, 50 இ-டிரான் சுமார் ரூ.11,370,00 எனவும், 55 இ-டிரான் ரூ.12,610,000 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுபோல் கியூ8 ஸ்போர்ட் பேக்-ல் 50 மற்றும் 55 இ-டிரான் வேரியண்ட்கள் அறிமுகம் ஆகியுள்ளன. திறன் வகையில் இரண்டுக்குமே பெரிய வேறுபாடு கிடையாது. மேம்படுத்தப்பட்ட மாடல்கள் என்றாலும் தோற்றத்தில் சிறிய மாற்றங்கள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஷோரூம் விலையாக ஸ்போர்ட் பேக் 55 சுமார் ரூ.11,820,000, ஸ்போர்ட் பேக் 55 சுமார் ரூ.13,060,000 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
The post ஆடி கியூ8 இ-டிரான் ஸ்போர்ட்பேக் appeared first on Dinakaran.