×

ஊத்துக்கோட்டை அருகே அரசுக்கு சொந்தமான நிலத்தை அளவீடு செய்ய மக்கள் எதிர்ப்பு

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அருகே அரசுக்கு சொந்தமான நிலத்தை அளவீடு செய்ய கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஊத்துக்கோட்டை அருகே லட்சிவாக்கம் ஊராட்சியில் பெரம்பூர் கிராமம் உள்ளது. இங்கு அரசுக்கு சொந்தமான தோப்பு புறம்போக்கு நிலம் சுமார் 5 ஏக்கர் உள்ளது. கடந்த மாதம் இப்பகுதியில் வசிக்கும் ஆதிதிராவிட மக்கள், ‘எங்களுக்கு இந்த நிலத்தை வழங்குகள்’ என்று முறையிட்டனர். நீண்டகாலமாக இவர்கள் விடுத்த கோரிக்கையையடுத்து 5 ஏக்கர் நிலத்தை 43 பேருக்கு பட்டாவாக வழங்கினர். இந்நிலத்தை அளவீடு செய்து வழங்குமாறு அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

அதன்படி நிலத்தை அளவீடு செய்ய ஊத்துக்கோட்டை தாசில்தார் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் நேற்று வந்தனர். இதையறிந்த பெரம்பூர் கிராமத்தை சேர்ந்த மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது, ‘இந்த இடத்தை அளவீடு செய்யாதீர்கள். ஏனென்றால் இந்த நிலம் குறித்து கிராம சபையில் தீர்மானங்கள் நிறைவேற்றி உள்ளோம்’ என்றனர். அதற்கு அதிகாரிகள் ‘ இது சம்மந்தமாக எதுவாக இருந்தாலும் கலெக்டரிடம் பேசி கொள்ளுங்கள்’ என்றனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இன்று 2வது நாளாக மீண்டும் அளவீடு செய்யும் பணி தொடங்கியது. இதனால் பெரம்பூர் கிராம பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

 

The post ஊத்துக்கோட்டை அருகே அரசுக்கு சொந்தமான நிலத்தை அளவீடு செய்ய மக்கள் எதிர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Putukkotta ,Euthukotta ,Putukotta ,
× RELATED சீத்தஞ்சேரி பஸ் நிறுத்தத்தில் 4...