×

பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள அகஸ்தியர் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி

நெல்லை: பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள அகஸ்தியர் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது . சொரிமுத்து அய்யனார் கோயில் திருவிழா காரணமாக 3 நாட்கள் பராமரிப்பு பணிகள் நடைபெற்றதால் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

நெல்லை மாவட்டம் காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவில், பாபநாசம் அகஸ்தியர் அருவிக்கு தூய்மைப் பணி காரணமாக பொதுமக்கள் செல்ல ஆகஸ்ட் 19, 20, 21 ஆகிய மூன்று நாட்கள் தடை விதிக்கப்பட்டது. கடந்த சனிக்கிழமை முதல் திங்கட்கிழமை வரை 3 நாட்களும் தூய்மை பணி காரணமாக பாபநாசம் அகஸ்தியர் அருவி மற்றும் கோவிலுக்கு பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

தூய்மை பணிக்காக செல்லும் வாகனங்கள் தவிர வேறு எவ்வித வாகனங்களுக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. ஆகஸ்ட் 19, 20, 21 ஆகிய 3 நாட்களுக்கு பாபநாசம் சோதனை சாவடி மூடப்படுவதாகவும் பொதுமக்கள் வருகிற 22ம் தேதி முதல் வழக்கம்போல் கோவிலுக்கு சென்று வரலாம் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று சொரிமுத்து அய்யனார் கோயிலில் பராமரிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில் அகஸ்தியர் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

The post பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள அகஸ்தியர் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி appeared first on Dinakaran.

Tags : Agasthiyar Falls ,Papanasam ,Western Ghats ,Nellie ,Sorimuthu… ,Agasthyar ,
× RELATED மேற்கு தொடர்ச்சி மலையடிவார...