×

மனைவிக்கு 100 நாள் பணி கேட்டு மண்வெட்டி, பாத்திரத்தை மாலையாக அணிந்து வந்த கணவர்

*ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு

கடலூர் : குறிஞ்சிப்பாடி அருகே உள்ள கருங்குழி கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் நேற்று தனது மனைவியுடன் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்திருந்தார். அப்போது அவர் தனது கழுத்தில் மண்வெட்டி, அன்னக்கூடை ஆகியவற்றை மாலையாக அணிந்திருந்தார். மேலும் கையில் பதாகைகளை வைத்திருந்தார். அப்போது அவர் கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். உடனே போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர் ஆட்சியர் அலுவலகத்தில் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் என் மனைவிக்கு வேலை வேண்டி கடந்த 1.4.2022 அன்று விண்ணப்பித்தேன்.

ஆனால் இதுநாள் வரை என் மனைவிக்கு இந்த திட்டத்தில் வேலை தர மறுக்கின்றனர். நான் பலமுறை முறையிட்டும் என் மனைவிக்கு வேலை தரவில்லை. வேலை அட்டையும் பதிவு செய்யவில்லை. அதே சமயம் எங்கள் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அவரது மகன்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தில் பள்ளி மாணவர்கள், கல்லூரியில் படிக்கும் மாணவர்களை சேர்ந்து முறைகேடு செய்துள்ளார்.

அது மட்டும் இல்லாமல் உறுப்பினர்கள் அனைவரும் வேலைக்கு வராமலே, வேலைக்கு வந்ததாக கூறி முறைகேடாக பணம் பரிவர்த்தனை செய்துள்ளார். எனவே இதுகுறித்து விசாரணை நடத்தி, 100 நாள் வேலை திட்டத்தில் அனைவருக்கும் சமமாக வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

The post மனைவிக்கு 100 நாள் பணி கேட்டு மண்வெட்டி, பாத்திரத்தை மாலையாக அணிந்து வந்த கணவர் appeared first on Dinakaran.

Tags : Cuddalore ,Rajendran ,Karunkhuzi ,Kurinchipadi ,
× RELATED கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த பாஜ நிர்வாகி குண்டர் சட்டத்தில் கைது