×

வாழிய வள்ளலார் சொன்ன ‘தருமமிகு சென்னை’ என 384வது சென்னை நாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: வாழிய வள்ளலார் சொன்ன ‘தருமமிகு சென்னை’ என 384வது சென்னை நாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 22-ம் தேதி மெட்ராஸ் தினமாகக் கொண்டாடப்படுகிறது. 1996 முதல் சென்னை என்று அழைக்கப்படும் மெட்ராஸ், இன்று தனது 384வது ஆண்டு விழாவைக் கொண்டாடுகிறது.

இந்நிலையில் 384வது சென்னை நாளையொட்டி முதல்வர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதவது; பேரறிஞர் அண்ணா தமிழ் நிலத்துக்கு தமிழ்நாடு என பெயர் சூட்டினார் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டிவீட்டர் பதிவில் பேரறிஞர் அண்ணா தமிழ் நிலத்துக்கு, தமிழ்நாடெனப் பெயர் சூட்டினார். தமிழினத் தலைவர் கலைஞர் தமிழ்நாட்டின் தலைநகருக்குச் சென்னை எனப் பெயர் மாற்றினார்.

கோடிக்கணக்கான மக்களின் வாழ்வியலோடு பிணைந்துவிட்ட சொல் என்பதா – ஊர் என்பதா – உயிர் என்பதா சென்னையை?சென்னை – ஒட்டுமொத்த இந்தியாவைப் பிரதிபலிக்கும் நிலைக்கண்ணாடி. பன்முகத்தன்மையின் சமத்துவச் சங்கமம்! வாழிய வள்ளலார் சொன்ன ‘தருமமிகு சென்னை’! இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

The post வாழிய வள்ளலார் சொன்ன ‘தருமமிகு சென்னை’ என 384வது சென்னை நாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Residential ,Vallalar ,Tharumamiku ,Chennai ,Chief President ,Mukhyamig Chennai ,G.K. ,Stalin ,day ,G.K. Stalin ,B.C. ,
× RELATED நெல்லையில் மேலும் ஒரு சிறுத்தை சிக்கியது