×

நாகப்பட்டினத்தில் சிபிசிஎல் நிறுவனத்தை சுமை தூக்கும் தொழிலாளர்கள் முற்றுகை

நாகப்பட்டினம், ஆக.22: நாகப்பட்டினம் அருகே பனங்குடி பொதுத்துறை நிறுவனத்தை முற்றுகையிட்டு சுமை தூக்கும் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர். நாகப்பட்டினம் அருகே பனங்குடியில் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் பொதுத்துறை நிறுவனமான சிபிசிஎல் நிறுவனம் உள்ளது. கடந்த 1989ம் ஆண்டு ஆலை நிறுவப்பட்டது. இங்கிருந்து சன்னமங்கலம், பனங்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 250 நபர்கள் சுமை தூக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சிபிசிஎல் அலுவலகத்திற்குள் ஒப்பந்தம் எடுத்துள்ள நிறுவனங்கள் பல ஆண்டுகாலமாக சுமை தூக்குவோர்களுக்கு பணி தர மறுத்து வந்தனர். இதற்கு சிபிசிஎல் நிறுவன அதிகாரிகளே காரணம் என்று சுமைதூக்கும் தொழிலாளர்கள் கூறினர்.

இதனால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் சுமைத்தூக்கும் தொழிலாளர்கள் நேற்று பனங்குடி சிபிசிஎல் அலுவலக நுழைவு வாயில் முன்பு திரண்டு முற்றுகையிட்டு சிபிசிஎல் நிறுவனத்தை கண்டித்து கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அலுவலகம் உள்ளே அதிகாரிகள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. பின்னர் சிபிசிஎல் பொது மேலாளர் ரமேஷ்பாபு மற்றும் நாகூர் இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து 3 மணி நேரத்திற்கு பின் முற்றுகை போராட்டம் முடிந்து அமைதியாக சென்றனர்.

The post நாகப்பட்டினத்தில் சிபிசிஎல் நிறுவனத்தை சுமை தூக்கும் தொழிலாளர்கள் முற்றுகை appeared first on Dinakaran.

Tags : CBCL ,Nagapattinam ,Panangudi PSU ,Dinakaran ,
× RELATED நாகை அருகே நடத்தையில் சந்தேகம் மனைவியை கொன்று எரித்த கணவன்