×

பந்தலூர் மற்றும் கூடலூரில் பூத்து குலுங்கும் செங்காந்தள் மலர்கள்: விவசாய பயிராக பயிரிட மானியம் வழங்க கோரிக்கை

 

பந்தலூர், ஆக.22: பந்தலூர் மற்றும் கூடலூர் பகுதிகளில் பூத்து குலுங்கும் செங்காந்தள் மலர்களை விவசாய பயிராக பயிரிடுவதற்கு உதவி மானியம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். நீலகிரி மாவட்டம், பந்தலூர் மற்றும் கூடலூர் பகுதிகளில் செங்காந்தள் மலர்கள் அதிகளவில் பூத்து குலுங்குகிறது. தமிழ்நாட்டின் மாநில மலரான செங்காந்தள் கூடலூர், பந்தலூர் வனப்பகுதிகள் மற்றும் சாலையோரங்களில் பூக்கிறது. இவற்றை இந்த பகுதியில் செல்லும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து புகைப்படம் எடுத்து செல்கின்றனர்.

மேலும் இந்த பூ கேரள மக்களால் ஓணம் பண்டிகைக்கு அதிகம் பயன்படுத்துவதால் ஓணப்பூ என்றும் அழைக்கின்றனர். பல்வேறு மருத்துவ குணம் நிறைந்த இந்த பூவின் வேர் மூலம் புற்று நோய்க்கு மருந்து கண்டறிந்து காப்புரிமை பெற்றுள்ளனர். ஆகவே இதன் தேவை அதிகரித்துள்ளது. தோட்டக்கலைத்துறை சார்பில் பல மாவட்டங்களில் விவசாய பயிராக பயிரிடுவதற்கு உதவி மானியங்கள் வழங்கப்படுகிறது. இந்நிலையில் கூடலூர், பந்தலூர் பகுதிகளில் இயற்கையாக விளையும் செங்காந்தள் மலரையும் விவசாயத்திற்கு ஊடு பயிராக அறிமுகப்படுத்தி மானியங்கள் வழங்கினால் விவசாயிகள் வளம் பெருகும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

The post பந்தலூர் மற்றும் கூடலூரில் பூத்து குலுங்கும் செங்காந்தள் மலர்கள்: விவசாய பயிராக பயிரிட மானியம் வழங்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Bandalur ,Cuddalore ,Kuddalur ,
× RELATED தொடர் மழை எதிரொலி வணிக வளாகத்தில் மழைநீர் புகுந்தது