×

மல்லிபுதூரில் இன்று மின்தடை

 

திருவில்லிபுத்தூர், ஆக.22: வலையப்பட்டி மற்றும் மல்லிபுதூர் துணை மின் நிலையங்களில் இன்று மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவில்லிபுத்தூர் மின் கோட்ட செயற்பொறியாளர் சின்னத்துரை வெளியிட்ட அறிக்கை: திருவில்லிபுத்தூர் மின் கோட்டத்தில் உள்ள வலையப்பட்டி மற்றும் மல்லிபுதூர் துணை மின் நிலையத்தில் மின் தொடர்பான மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று நடைபெறுகிறது. எனவே மேற்படி துணை மின் நிலையங்களில் இருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளான குன்னூர், சொக்கம்பட்டி, லட்சுமியாபுரம், மூவரை வென்றான்,

பூவாணி, பிள்ளையார் நத்தம், கிருஷ்ணன் கோவில், அழகாபுரி, எம்.புதுப்பட்டி, மங்கலம், மல்லிபுதூர், மல்லி ஏரியா, நாகபாளையம், மாயத்தேவன்பட்டி, மூவரைவென்றான், அப்பநாயக்கர்பட்டி, நக்கமங்கலம், மானகசேரி, கோப்பையநாயக்கர்பட்டி, வேண்டுராயபுரம், சாமிநத்தம், ஈஞ்சார், ராஜா நகர், சிவா நகர், கார்த்திகைப்பட்டி ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்

The post மல்லிபுதூரில் இன்று மின்தடை appeared first on Dinakaran.

Tags : Malliputhur ,Thiruvilliputhur ,Velayapatti ,Tiruvilliputhur ,Dinakaran ,
× RELATED திருப்புவனம் அருகே சோகம் 6 மாத...