×

மெரினா கடற்கரை மணலில் புதைந்திருந்த 4 பழங்கால கற்சிலைகள் மீட்பு: மயிலாப்பூர் தாசில்தாரரிடம் ஒப்படைப்பு

சென்னை: மெரினா கடற்கரை மணலில் புதைந்திருந்த 4 பழங்கால கற்சிலைகள் மீட்கப்பட்டு, மயிலாப்பூர் தாசில்தாரரிடம் ஒப்படைக்கப்பட்டது. மெரினா கலங்கரை விளக்கம் பின்புறம் உள்ள மணற்பரப்பில் நேற்று சிறுவர்கள் சிலர் மணலை தோண்டி விளையாடிக் கொண்டு இருந்தனர். அப்போது கற்சிலை ஒன்று வெளியில் தெரிந்துள்ளது. இதுபற்றி அருகில் இருந்தவர்களிடம் கூறியுள்ளனர். அதைப் பார்த்த பெரியவர்கள் இது சாமி சிலை என்று தொட்டு வணங்கினர். பின்னர் நடந்த சம்பவம் குறித்து பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

அதன்பேரில் மெரினா போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, மணலில் புதைத்திருந்த சிலையை மீட்ட போது அடுத்தடுத்து 4 சிலைகள் அங்கு இருப்பது தெரிந்தது. மீட்கப்பட்ட 4 சிலைகளும் தொன்மையானவை என தெரியவந்தது. இதையடுத்து மெரினா போலீசார் கலங்கரை விளக்கம் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி பதிவுகளை பெற்று, சிலை கடத்தல் கும்பல்கள் யாரேனும் கற்சிலையை கப்பல் மூலம் வெளிநாட்டிற்கு கடத்துவதற்காக பதுக்கி வைத்தனரா, எங்கிருந்து திருடப்பட்டது என விசாரணை நடத்தி வருகின்றனர். மீட்கப்பட்ட 4 சிலைகளை மயிலாப்பூர் தாசில்தாரரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் ெமரினா கடற்கரையில் பரபரப்பை ஏற்படுத் தியது.

The post மெரினா கடற்கரை மணலில் புதைந்திருந்த 4 பழங்கால கற்சிலைகள் மீட்பு: மயிலாப்பூர் தாசில்தாரரிடம் ஒப்படைப்பு appeared first on Dinakaran.

Tags : Marina Beach ,Mylapore ,CHENNAI ,Mylapore Tahsildar ,Marina Lighthouse… ,Beach ,
× RELATED மாநிலக்கல்லூரி மாணவனை தாக்கிய...