×

திருக்கழுக்குன்றத்தில் குறுவட்ட விளையாட்டு

திருக்கழுக்குன்றம்: 2023 மற்றும் 2024ம் ஆண்டிற்கான சதுரங்கம், கேரம், எறிபந்து, கைப்பந்து, கூடைப்பந்து, டேபிள் டென்னிஸ், கோ-கோ, ஹாக்கி, கபடி உள்ளிட்ட விளையாட்டு போட்டிகள் நடந்தன. திருக்கழுக்குன்றம் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த இந்த விளையாட்டு போட்டிகளில் திருக்கழுக்குன்றத்தை சுற்றியுள்ள அரசு மற்றும் தனியார் என 52 பள்ளிகள் பங்கேற்றனர்.

3 பிரிவுகளுக்கான விளையாட்டு போட்டிகளில் மாணவ, மாணவிகள் என தனித்தனியே பிரிக்கப்பட்டு நடந்தது. இப்போட்டிகளை திருக்கழுக்குன்றம் பேரூராட்சி மன்ற தலைவர் ஜி.டி.யுவராஜ் துவக்கி வைத்தார். இதில், பேரூராட்சி கவுன்சிலர்கள் பழனி, சத்தியமூர்த்தி, தலைையாசிரியை லதா மற்றும் பள்ளி ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். வெற்றி பெற்றவர்கள் மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கு பெறுவார்கள்.

The post திருக்கழுக்குன்றத்தில் குறுவட்ட விளையாட்டு appeared first on Dinakaran.

Tags : Thirukkalukunram ,Thirukkallukkunram ,CD ,
× RELATED உலக நன்மைவேண்டி வேதகிரீஸ்வரர் கோயிலில் 1008 பால்குட ஊர்வலம்