×

இஸ்ரோ தலைவர் சோம்நாத், மத்திய விண்வெளித்துறை இணை மந்திரி ஜிதேந்திர சிங்கை டெல்லியில் சந்திப்பு: சந்திரயான்-3 குறித்து விளக்கம்

புதுடெல்லி: இஸ்ரோ தலைவர் சோம்நாத், மத்திய விண்வெளித்துறை இணை மந்திரி ஜிதேந்திர சிங்கை டெல்லியில் சந்தித்து சந்திரயான்-3 தயார் நிலை குறித்து விளக்கமளித்தார். நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ அனுப்பிய சந்திரயான்-3 விண்கலம் எல்விஎம் ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த ஜூலை 14ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது.

நிலவின் புவிவட்ட சுற்றுப்பாதையில் உள்ள சந்திரயான்-3 விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டரை பிரிக்கும் முக்கியமான பணி கடந்த 17ஆம் தேதி மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் நாளை மறுநாள் மாலை 6.04 மணியளவில் விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்க உள்ளது.

இந்த நிலையில் இஸ்ரோ தலைவர் சோம்நாத், மத்திய விண்வெளித்துறை இணை மந்திரி ஜிதேந்திர சிங்கை டெல்லியில் சந்தித்து சந்திரயான்-3 தயார் நிலை குறித்து விளக்கமளித்தார். சந்திரயான்-3 விண்கலத்தின் பயணம் திட்டப்படி சரியான பாதையில் செல்வது குறித்து மந்திரியிடம் அவர் விளக்கமளித்தார். மேலும் விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்குவதில் எந்த சிக்கலும் ஏற்படாது என்று சோம்நாத் நம்பிக்கை தெரிவித்தார்.

The post இஸ்ரோ தலைவர் சோம்நாத், மத்திய விண்வெளித்துறை இணை மந்திரி ஜிதேந்திர சிங்கை டெல்லியில் சந்திப்பு: சந்திரயான்-3 குறித்து விளக்கம் appeared first on Dinakaran.

Tags : ISRO ,Somnath ,Union ,Minister for Space ,Affairs ,Jidendra Singh ,Delhi ,New Delhi ,Union Minister for Space ,Chandrayaan ,President ,Union Minister for Space Affairs ,
× RELATED விண்ணுக்கு சென்று பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி: இஸ்ரோ தகவல்