×

ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்தை செயல்படுத்தும் வகையில் தமிழ்நாடு ஆன்லைன் விளையாட்டு ஆணையம் அமைத்து அரசிதழில் வெளியீடு..!

சென்னை: ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்தை செயல்படுத்தும் வகையில் தமிழ்நாடு ஆன்லைன் விளையாட்டு ஆணையம் அமைத்து அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. ஆன்லைன் விளையாட்டு ஆணைத்தின் தலைவராக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி நசிமுதீன் நியமிக்கபட்டுள்ளார்.

ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி சாரங்கன், பேராசிரியர் செல்லப்பன் உள்பட 4 பேர் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். உளவியலாளர் ரவீந்திரன், தனியார் நிறுவன அதிகாரி விஜய் கருணாகரன் ஆகியோரும் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் வகையில் ஆணையம் அமைக்கப்பட்டு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

இதனிடையே, வெறும் யூகங்களின் அடிப்படையில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆன்லைன் நிறுவனங்கள் வாதிட்டனர். ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் கூட்டமைப்பில் கடுமையான விதிகள், சுய ஒழுங்கு முறையாக பின்பற்றப்படுவதாக தெரிவிக்கபட்டது. தொடர்ந்து, ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் சூதாட்டத்தில் ஈடுபடுவதில்லை. பந்தயம் வைத்து விளையாடும் திறமைக்கான விளையாட்டு சூதாட்டமே என்ற அரசின் வாதம் ஏற்கத்தக்கதல்ல என கூறியுள்ளனர்.

மேலும், ஆன்லைன் விளையாட்டுகளை முறைப்படுத்த நடவடிக்கைகளை எடுத்து, அதை மீறினால் தடை செய்யலாம் என தெரிவித்ததை அடுத்து, ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை எதிர்த்து விளையாட்டு நிறுவனங்கள் தாக்கல் செய்த வழக்கு ஆகஸ்ட் 24ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

The post ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்தை செயல்படுத்தும் வகையில் தமிழ்நாடு ஆன்லைன் விளையாட்டு ஆணையம் அமைத்து அரசிதழில் வெளியீடு..! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Online Sports Commission ,Rasitaza ,Chennai ,Dinakaran ,
× RELATED சென்னை சேப்பாக்கத்தில்...