×

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கட்டிட கழிவுகளை கால்வாயில் கொட்டியதே தி.நகரில் வெள்ளம் ஏற்படுவதற்கு காரணம்: 6 ஒப்பந்ததாரர்கள் மீது கடும் நடவடிக்கை

ெசன்னை: மாம்பலம் கால்வாயில் அகற்றாமல் விடப்பட்ட கட்டிட கழிவுகளே திநகர் மற்றும் சுற்றுவட்டாரப்பகுதியில் வெள்ளம் ஏற்படுவதற்கு காரணம் என்பது தெரிய வந்தது. இதை தொடர்ந்து ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பணிகளை மேற்கொண்ட 6 ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி தலைமை பொறியாளர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் கடந்த 6ம் தேதி விடிய, விடிய மழை ெகாட்டி தீர்த்தது. வரலாறு காணாத  அளவுக்கு அன்றைய தின இரவில் மட்டும் 23 செ.மீ வரை மழை பதிவானதாக தெரிகிறது. இதன் காரணமாக சென்னையில் பல சாலைகள், தெருக்களில் தண்ணீர் தேங்கி கிடந்தது. குறிப்பாக, சென்னை தி.நகர், ஆயிரம் விளக்கு தேனாம்பேட்டை, மேற்கு மாம்பலம், சிஐடி நகர் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில் மட்டும் எப்போதும் இல்லாத அளவுக்கு 3 முதல் 5 அடி வரை தண்ணீர் தேங்கி கிடந்தது. இதனால், மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டது. இவ்வாறு தேங்கி கிடந்த மழை நீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். இதில், மாநகராட்சி சார்பில், திநகர் குடியிருப்பு பகுதிகளில் இருந்து வடிகால்கள் வழியாக தண்ணீரை வெளியேற்றிய போதிலும், தண்ணீர் கால்வாயில் செல்லவில்லை. மாறாக, வடிகால்களில் இருந்து மீண்டும் ரிவர்ஸ் ஆகி தண்ணீர் வந்தது. இதனால், சில நாட்களாக குடியிருப்பு பகுதியில் தண்ணீர் அப்படியே தேங்கி கிடந்தது. இந்த நிலையில் தண்ணீர் ஏன் வடியாமல் இருக்கிறது என்பது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது, திநகர், ஆயிரம் விளக்கு, தேனாம்பேட்டை, மேற்கு மாம்பலம், சிஐடி நகர் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில் இருந்து வரும் வெளியேறும் தண்ணீர் மாம்பலம் கால்வாய் வழியாக தான் வெளியேறுகிறது. இந்த கால்வாயை சீரமைக்க கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் 6 ஒப்பந்ததாரர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. அவர்கள் கால்வாய் சீரமைப்பு பணிகளை முறையாக மேற்கொள்ளவில்லை. மாறாக, சீரமைப்பு பணியின் போது, கட்டிட கழிவுகளை கால்வாய் அருகே ஆங்காங்கே கொட்டி விட்டு சென்றனர். இந்த நிலையில் சென்னையில் விடிய,விடிய பெய்த மழை காரணமாக கட்டிட கழிவுகள் கால்வாயின் நீர் வழித்தடத்தை அடைத்து கொண்டது. இதனால், தண்ணீர் சீராக செல்ல முடியாமல் வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கால்வாயை சீரமைக்க களமிறங்கிய மாநகராட்சி அதிகாரிகள், அடைப்புகள் மற்றும் கட்டிடக் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து தியாகராயர் நகர், ஜி.என்.செட்டி சாலை உள்ளிட்ட பகுதிகளில் மோட்டார் கொண்டு தண்ணீரை வெளியேற்றும் பணியிலும் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். அதன்பிறகே, தி.நகர், மேற்கு மாம்பலம், தேனாம்பேட்டை குடியிருப்புகளில் பகுதிகளில் தேங்கியிருந்த மழை நீர் மெல்ல, மெல்ல வடிந்தது.இந்த நிலையில் ஒப்பந்ததாரர்கள் அலட்சியத்துடன் செயல்பட்டது தான் நீரோட்டம் தடை ஏற்பட்டதற்கு முக்கிய காரணம் என்பதால் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி தலைமை பொறியாளர் ராஜேந்திரன் தெரிவித்தார். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், மாம்பலம் கால்வாய் வள்ளுவர் கோட்டத்தில் இருந்து மாம்பலம், தி.நகர், சிஐடி நகர் வழியாக சென்று பின்னர் நந்தனம் ஓய்எம்சிஏ வழியாக அடையாறு ஆற்றை அடைகிறது. இதன் மூலம் அந்த பகுதிகளில் தேங்கும் மழை நீர் கால்வாய்க்கு சென்று எளிதாக அடையாற்றை அடையும். இதனால், அந்த பகுதிகள் பெரும்பாலும் வெள்ளப்பாதிப்பில் இருந்து தப்பித்து விடும். ஆனால், இந்த கால்வாய் முற்றிலும் அடைக்கப்பட்டு, மழை நீர் வடியாத சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மாம்பலம் கால்வாய் 5.8 கிலோ மீட்டர் நீளத்துக்கு கட்டிட கழிவுகளால் அடைக்கப்பட்டிருந்தது.  இதற்கு முக்கிய காரணம் தி.நகரில் ஸ்மார்ட் சிட்டி அமைக்கும் பணியை மேற்கொண்ட ஒப்பந்ததாரர் தான். அவர், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் ேபாது அங்கிருந்து அகற்றப்பட்ட கட்டிட கழிவுகளையும், தேவையற்ற பொருட்களையும் முறையாக அப்புறப்படுத்தாமல் கூடுதல் செலவு பிடிக்கும் என்பதால் மாம்பலம் கால்வாயில் கொட்டி விட்டு சென்று விட்டனர். இதனாலேயே தி.நகர் பகுதியில் வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டது. தற்போது கால்வாயில் அடைப்பு அகற்றப்பட்டதால் தண்ணீர் எளிதாக சென்று விட்டன’ என்றார். மாம்பலம் கால்வாய் 5.8 கிலோ மீட்டர் நீளத்துக்கு கட்டிட கழிவுகளால் அடைக்கப்பட்டிருந்தது.  இதற்கு முக்கிய காரணம் தி.நகரில் ஸ்மார்ட் சிட்டி அமைக்கும் பணியை மேற்கொண்ட ஒப்பந்ததாரர்தான்….

The post ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கட்டிட கழிவுகளை கால்வாயில் கொட்டியதே தி.நகரில் வெள்ளம் ஏற்படுவதற்கு காரணம்: 6 ஒப்பந்ததாரர்கள் மீது கடும் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Smart City ,SANNI ,Mangalam canal ,Dinagar ,Dinakaran ,
× RELATED ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில்...