×

தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் கே.சி.ஆர்

ஹைதராபாத்: தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தலுக்கான ஆளும் பிஆர்எஸ் கட்சியின் (பாரத் ராஷ்டிர சமிதி) முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை முதல்வர் கே.சந்திரசேகர ராவ் இன்று வெளியிட்டார். 115 தொகுதிகளுக்கான முதலாவது வேட்பாளர் பட்டியலை கேசிஆர் வெளியிட்டார். தெலுங்கானாவில் மொத்தம் 119 தொகுதிகள் உள்ளன. இம்மாநிலத்தில் பெரும்பான்மைக்கு தேவை மொத்தம் 60 இடங்கள். 2014 மற்றும் 2018 தேர்தல்களில் தெலுங்கானா சட்டசப்பை தேர்தல்களில் முந்தைய தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி- தற்போதைய பாரத் ராஷ்டிர சமிதி கட்சியே (பிஆர்எஸ்) வென்றது. தெலுங்கானா முதல்வராக 2-வது முறையாக சந்திரசேகர ராவ் பதவி வகித்து வருகிறார்

2018-ம் ஆண்டு தெலுங்கானா சட்டசபை தேர்தலில் சந்திரசேகர ராவ் கட்சி 88 இடங்களைக் கைப்பற்றியது. 2014 தேர்தலில் 103 இடங்களில் வென்றிருந்தது. 2018-ல் காங்கிரஸ் கட்சி 19 இடங்களைக் கைப்பற்றியது. 2014 தேர்தலில் வெறும் 5 இடங்களில்தா காங்கிரஸ் வெற்றி பெற்றிருந்தது. தெலுங்கானாவில் பிஆர்எஸ், காங்கிரஸ் கட்சிகளுடன் பாஜக, இடதுசாரிகள், ஓவைசியின் மஜ்லிஸ் கட்சி, சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம், ஒய்.எஸ்.ஆர். ஷர்மிளாவின் ஒய்.எஸ்.ஆர்.டி.பி, பவன் கல்யாணின் ஜனசேனா ஆகியவையும் தேர்தல் களத்தில் உள்ளன.

தெலுங்கானாவில் பாஜக விஸ்வரூபம் எடுத்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தெலுங்கானா சட்டசபை தேர்தல் நெருங்கிவிட்டது. தெலுங்கானாவில் ஆட்சியை பிடிக்க முடியாமல் போனாலும் முதல்வர் சந்திரசேகர ராவுக்கு சவாலாகவும் காங்கிரஸின் இருப்பை அழிக்கவும் பாஜக முனைப்புடன் இருக்கிறது. தெலுங்கானா தேர்தல் களம் இப்போதே அனல் பறக்கும் நிலையில் இன்று ஆளும் பிஆர்எஸ் கட்சியின் முதலாவது வேட்பாளர் பட்டியலை முதல்வர் கே.சந்திரசேகர ராவ் வெளியிட்டார். மொத்தம் 115 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார். வேட்பாளர்களில் பெரும்பாலானவர்கள் சிட்டிங் எம்.எல்.ஏக்கள். தெலுங்கானா முதல்வர் கேசிஆர் கஜ்வெல், கமரெட்டி ஆகிய 2 சட்டசபை தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிர்பூர் – கோனேரு கோணப்பா, சென்னூர் (எஸ்சி) – பால்கா சுமன், பெல்லம்பள்ளி (SC)- துர்கம் சின்னையா, மஞ்சிரியாலா -நடிபெல்லி திவாகர் ராவ், ஆசிபாபாத் (ST)- கோவா லட்சுமி, கானாபூர் (ST)- புக்யா ஜான்சன் ரத்தோர் நாயக், அடிலாபாத் – ஜோகு ராமண்ணா, அனில் ஜாதவ், நிர்மல்-அலோலா இந்திரகரன் ரெட்டி, முதோல் – காதிகாரி வித்தல் ரெட்டி, கவசம்- ஆஷனகரி ஜீவன் ரெட்டி, போதன்- முகமது ஷகீல் அமீர், .ஜுக்கல் (SC)- ஹன்மந்த் ஷிண்டே, பான்சுவாடா- போச்சரம் ஸ்ரீனிவாஸ் ரெட்டி, யல்லா ரெட்டி – ஜஜாலா சுரேந்தர், காமரெட்டி- கே. சந்திரசேகர் ராவ் (கேசிஆர்), நிஜாமாபாத் நகர்- பிகாலா கணேஷ் குப்தா, நிஜாமாபாத் ரூரல் – கோவர்தன் பாஜிரெட்டி, பால்கொண்டா – வெமுலா பிரசாந்த் ரெட்டி, கொருட்லா- டாக்டர். சஞ்சய் கல்வகுந்த்லா, ஜகித்யாலா- டாக்டர். எம். சஞ்சய் குமார், தர்மபுரி (எஸ்சி)- கொப்புலா ஈஸ்வர், ராமகுண்டம்- கொருகண்டி சந்தர், மாந்தானி – புட்ட மது, பெத்தபள்ளி- தாசரி மனோகர் ரெட்டி, கரீம்நகர்- கங்குலா கமலாகர், சொப்பதண்டி (SC)- சுங்கே ரவிசங்கர், வெமுலவாடா- சல்மேடா லட்சுமி நரசிம்ம ராவ், சிரிசில்லா, மணகொண்டூர் (எஸ்சி) -சிவப்பு பாலகிஷன் (ராசமாய்), ஹுசூராபாத்- பாடி கௌசிக் ரெட்டி, ஹுஸ்னாபாத்- வோடிடெலா சதீஷ்குமார் ஆகியோரை வேட்பாளராக அறிவித்துள்ளனர்.

 

The post தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் கே.சி.ஆர் appeared first on Dinakaran.

Tags : Telangana State Assembly ,K.K. RC R.R. ,Hyderabad ,PRS Party ,Bharat Rashtra Samiti ,K. RC R ,
× RELATED ஐபிஎல்: இன்றைய போட்டியில் ஹைதராபாத் – டெல்லி இன்று மோதல்