×
Saravana Stores

அச்சுறுத்தும் சூறாவளியால் அச்சத்தில் மக்கள்: 84 ஆண்டுகளில் கலிஃபோர்னியாவைக் கடக்கும் பெரும் சூறாவளி ஹிலாரி…!

கலிஃபோர்னியா: அதிசக்தி வாய்ந்த வெப்ப மண்டல சூறாவளியான ஹிலாரி கலிஃபோர்னியா மகாணத்தை தாக்கியது. அமெரிக்கா உள்ளிட்ட பல மேற்கத்திய நாடுகளில் இந்த வருடம் கோடை வெப்பம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிமாக தாக்கியது. இதுவரை இல்லாத வகையில் அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தை பலமான சூறாவளி தாக்க இருப்பதாக வானிலை ஆராய்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர். ஹிலாரி என பெயரிடப்பட்டுள்ள இந்த சூறாவளி நேற்று உருவானது. இது கிழக்கு பசிபிக் கடல் பகுதியை நோக்கி விரைகிறது. இந்த சூறாவளி மெக்சிகோ நாட்டிலும், அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்திலும் கனமழை பொழிவை ஏற்படுத்தலாம் என்றும் அறிவித்துள்ளனர்.

சூறாவளி காரணமாக பலத்த மழை பெய்து வருவதால் பல்வேறு நகரங்களை வெள்ளம் முகாமிட்டுள்ளது. ஹிலாரி கடந்த 84 ஆண்டுகளில் கலிஃபோர்னியாவை கடக்கும் முதல் வெப்ப மண்டல சூறாவளியாகும். இதன் காரணமாக கலிஃபோர்னியா அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 3 முதல் 4 அங்குலம் அளவுக்கு பலத்த மழை பெய்தது. இதனால், மாகாணத்தின் முக்கிய சாலைகள் திடீர் ஆறுகளாக மாறிவிட்டன. சாலையில் நிறுத்தப்பட்டு இருந்த வானங்களை வெள்ளம் இழுத்து சென்றது. ஆற்றல் மிகுந்த சூறாவளி காற்று மரங்கள் மற்றும் மின் கம்பங்களை பிடிங்கி எரிந்தது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் பல்வேறு வீடுகளின் மரக்கூரைகளை சூறைக்காற்று இழுத்து சென்றுவிட்டதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

The post அச்சுறுத்தும் சூறாவளியால் அச்சத்தில் மக்கள்: 84 ஆண்டுகளில் கலிஃபோர்னியாவைக் கடக்கும் பெரும் சூறாவளி ஹிலாரி…! appeared first on Dinakaran.

Tags : Hillary ,California ,United States ,The Great Hurricane Hillary to ,
× RELATED அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு; மும்பை...