×

ரயிலில் திடீர் புகை அபாய சங்கிலியை இழுத்து நிறுத்திய பயணிகள்

ஜோலார்பேட்டை: கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து ஜோலார்பேட்டை ரயில் நிலையம் வரை இயக்கப்படும் சொர்ணா எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று முன்தினம் இரவு 9.30 மணியளவில் ஜோலார்பேட்டை ரயில் நிலையம் அருகே பக்கிரிதக்காவுக்கு வந்தது. அப்போது ரயில் இன்ஜின் பின்புறம் உள்ள 3வது பயணிகள் பெட்டியில் திடீரென புகை வந்ததாக கூறப்படுகிறது. இதனால் பயணிகள் அலறி அடித்தபடி அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினர். விசாரணையில், பெட்டியின் அடியில் திடீரென புகை வந்ததால் ரயிலை நிறுத்தியதாக பயணிகள் தெரிவித்தனர். ஆனால், புகை வந்ததற்கான அறிகுறி இல்லை. இதன்பின்னர், ரயிலில் சோதனை நடத்தப்பட்டு, நேற்று காலை மீண்டும் பெங்களுருவுக்கு ரயில் புறப்பட்டு சென்றது.

The post ரயிலில் திடீர் புகை அபாய சங்கிலியை இழுத்து நிறுத்திய பயணிகள் appeared first on Dinakaran.

Tags : Jolarpet ,Karnataka ,Bangalore ,Jolarpet Railway Station ,Dinakaran ,
× RELATED சிக்னல் கோளாறால் சென்னை ரயில் நடுவழியில் நிறுத்தம்: பயணிகள் அவதி