×

அல்கராஸ் – ஜோகோவிச் மீண்டும் மோதல்

சின்சினாட்ட்டி ஓபன் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் நம்பர் 1 வீரர் கார்லோஸ் அல்கராஸுடன் செர்பிய நட்சத்திரம் நோவாக் ஜோகோவிச் மோதுகிறார். அரையிறுதியில் போலந்தின் ஹூபர்ட் ஹர்காக்ஸுடன் மோதிய அல்கராஸ் (ஸ்பெயின்) 2-6, 7-6 (7-4), 6-3 என்ற செட் கணக்கில் 2 மணி, 18 நிமிடம் போராடி வென்று பைனலுக்கு முன்னேறினார். ஹர்காக்ஸ் 2வது செட்டில் மேட்ச் பாயின்ட் வரை சென்றும் வெற்றியை வசப்படுத்த முடியாமல் ஏமாற்றத்துடன் வெளியேறினார்.

மற்றொரு அரையிறுதியில் ஜோகோவிச் 7-6 (7-5), 7-5 என்ற நேர் செட்களில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரவை வீழ்த்தினார். பரபரப்பான இறுதிப் போட்டியில் அல்கராஸ் – ஜோகோவிச் மீண்டும் மோதுகின்றனர். 2023 விம்பிள்டன் பைனலில் ஜோகோவிச்சை வீழ்த்தி அல்கராஸ் சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.

The post அல்கராஸ் – ஜோகோவிச் மீண்டும் மோதல் appeared first on Dinakaran.

Tags : Algaraz ,Djokovic ,Novak ,Carlos Algaraz ,Cincinnati Open ,Dinakaran ,
× RELATED அல்கராஸ் மீண்டும் சாம்பியன்: பைனலில் ஜோகோவிச்சை வீழ்த்தினார்