×

அஜித் பவாரை போல பாஜவுடன் கைகோர்க்கும் தவறை சரத் பவார் செய்ய மாட்டார்: சிவசேனா(உத்தவ்) எம்பி சஞ்சய் ராவத் உறுதி

மும்பை: பாஜவுடன் கூட்டணி அமைக்கும் பெரும் தவறை சரத் பவார் ஒருபோதும் செய்ய மாட்டார் என சிவசேனா உத்தவ் அணி நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ராவத் உறுதியுடன் தெரிவித்துள்ளார். தேசியவாத காங்கிரசில் இருந்து விலகி பாஜ கூட்டணியில் ஐக்கியமான அஜித் பவார் துணை முதல்வராக பதவி வகித்து வருகிறார். ஆனால் அஜித் பவார் தன் சித்தப்பாவும், தேசியவாத காங்கிரஸ் தலைவருமான சரத் பவாரை அடிக்கடி சந்தித்து பேசி வருவது அரசியல் களத்தில் விவாத பொருளாகி வருகிறது.

இந்நிலையில் சிவசேனா உத்தவ் அணியின் அதிகாரப்பூர்வ நாளிதழான சாம்னாவில் அதன் நிர்வாக ஆசிரியரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சஞ்சய் ராவத் எழுதியுள்ள கட்டுரையில், ‘பாஜவுடன் சேர்ந்த அஜித் பவாரின் அரசியல் மணல் கோட்டை போல சரிந்து விடும். அஜித் பவாரை சந்தித்த பிறகு, மோடி, பாஜவுக்கு எதிரான உறுதியான நிலைப்பாட்டை சரத் பவார் எடுத்துள்ளார். மோடியை ஆதரிப்பது பிற்போக்கு சக்திகளை ஆதரிப்பது போன்றது என்று சரத் பவார் கருதுகிறார். எனவே பாஜவுடன் கைகோர்க்கும் பெரும் தவறை சரத் பவார் ஒருபோதும் செய்ய மாட்டார்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post அஜித் பவாரை போல பாஜவுடன் கைகோர்க்கும் தவறை சரத் பவார் செய்ய மாட்டார்: சிவசேனா(உத்தவ்) எம்பி சஞ்சய் ராவத் உறுதி appeared first on Dinakaran.

Tags : Sharad Pawar ,BJP ,Ajit Pawar ,Shiv Sena ,Uddav ,Sanjay Raut ,Mumbai ,Uddhav ,Sanjay Rawat ,Dinakaran ,
× RELATED தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு