×

லடாக்கில் சீனா ஆக்கிரமிப்பு: ராகுல் குற்றச்சாட்டு; பாஜ பதிலடி

புதுடெல்லி: லடாக்கில் சீனா ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக ராகுல் காந்தி நேற்று குற்றம்சாட்டினார். அதற்கு சீனாவின் பிரசார இயந்திரமாக ராகுல் காந்தி செயல்படுகிறார் என பாஜ மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் பதிலடி கொடுத்தார். லடாக் சென்றுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி,‘‘ இந்தியாவின் ஒரு இஞ்ச் நிலம் கூட சீனாவால் ஆக்கிரமிக்கப்படவில்லை என்று பிரதமர் மோடி கூறுவது உண்மை அல்ல. தங்களின் மேய்ச்சல் நிலத்தை சீனா ஆக்கிரமித்துள்ளதாக லடாக் மக்கள் தெரிவிக்கின்றனர்’’ என்றார்.

இது பற்றி கருத்து தெரிவித்த, முன்னாள் ஒன்றிய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்,‘‘ லடாக் குறித்து ராகுல் தெரிவித்த கருத்துகள் தவறானது. ராகுலின் பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்கிறேன். இந்திய வீரர்கள் வீரத்துடன் சண்டையிட்டதால் சீனா படை அங்கிருந்து வாபஸ் பெற்றது. ராணுவத்தின் வீர தியாகத்தை குறித்து நீங்கள் சந்தேகம் எழுப்புகிறீர்கள். லடாக் சென்று இந்தியாவை அவமானப்படுத்துகிறீர்கள். சீனாவின் பிரசார இயந்திரமாக ராகுல் மாறிவிட்டார்’’ என்றார்.

The post லடாக்கில் சீனா ஆக்கிரமிப்பு: ராகுல் குற்றச்சாட்டு; பாஜ பதிலடி appeared first on Dinakaran.

Tags : Ladakh ,Rahul ,BJP ,New Delhi ,Rahul Gandhi ,China ,Dinakaran ,
× RELATED பாஜக ஆதரவு நிலையை எடுத்ததாக வேலுமணி...