×

பெங்களூருவில் 23ம் தேதி அனைத்து கட்சி கூட்டம்: கர்நாடக அரசு ஏற்பாடு

பெங்களூரு: பெங்களூரு விதான சவுதாவில் புதன்கிழமை நடைபெற உள்ள அனைத்து கட்சி கூட்டத்தில் காவிரி, மகதாயி உள்ளிட்ட நதி நீர் பிரச்னை குறித்து விவாதிக்கப்படும் என துணை முதல்வர் டிகே சிவகுமார் கூறினார். மாநில துணை முதல்வர் டிகேசிவகுமார், பெங்களூரு சதாசிவாநகரிலுள்ள அவரின் வீட்டில் நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- பெங்களூரு விதான சவுதாவில் வருகிற புதன் கிழமை அனைத்து கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல்வர் சித்தராமையா தலைமையில் இந்த கூட்டம் நடைபெறுகிறது.

இக்கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று கட்சி வேறுபாடு இன்றி அனைத்து கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறந்துவிடப்பட்ட நிலையில் இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மாநில அரசின் சார்பில் கோரிக்கை விடுப்பது குறித்தும் அனைத்து கட்சி தலைவர்களின் கருத்துகள் கேட்கப்படும். நமது அணைகளில் நீர் மட்டம் குறைவாக உள்ளது. மழை அளவு குறைந்துள்ளதால் அடுத்து என்ன செய்யவேண்டும் என்பது குறித்து விவாதித்து அடுத்து என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது முடிவு செய்யப்படும். இவ்வாறு டி.கே.சிவகுமார் கூறினார்.

The post பெங்களூருவில் 23ம் தேதி அனைத்து கட்சி கூட்டம்: கர்நாடக அரசு ஏற்பாடு appeared first on Dinakaran.

Tags : Bengaluru ,Karnataka Govt. Bengaluru ,Vidhan Souda, Bengaluru ,Cauvery ,Magadai ,
× RELATED “வெறுப்புக்கு எதிராக நான் வாக்களித்துவிட்டேன்; நீங்களும்…”: பிரகாஷ் ராஜ்