×

நவம்பரில் ஏழுமலையானை தரிசிக்க 23, 24ம் தேதிகளில் டிக்கெட் வெளியீடு

திருமலை: திருப்பதி ஏழுமலையானை நவம்பர் மாதம் தரிசிக்க 23, 24ம் தேதிகளில் டிக்கெட் வெளியிடப்பட உள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவம்பர் மாதம் சுவாமி தரிசனம் செய்வதற்கான ரூ.300 தரிசன டிக்கெட் ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது.

எனவே, பக்தர்கள் வருகிற 24ம்தேதி காலை 10 மணி முதல் இந்த டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம். இதேபோல், நவம்பர் மாதம் மூத்தகுடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், தீராத நோயால் அவதிப்படுபவர்கள் வருகிற 23ம் தேதி மதியம் 3 மணிக்கு டிக்கெட்டுகளை பெற்று கொள்ளலாம். அங்கபிரதட்சணம் செய்ய 23ம் தேதி காலை 10 மணிக்கு டிக்கெட் வெளியிடப்பட உள்ளது. இவ்வாறு, அதில் கூறப்பட்டிருந்தது.

The post நவம்பரில் ஏழுமலையானை தரிசிக்க 23, 24ம் தேதிகளில் டிக்கெட் வெளியீடு appeared first on Dinakaran.

Tags : lions ,Tirumala ,Tirumala Tirupati Devasthanam ,Tirupati ,Elephants ,
× RELATED வேங்கடவனை நினைக்க வினைகள் அகலும்!