×

அயர்லாந்து அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் 186 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி

டப்ளின்: அயர்லாந்து அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் 186 ரன்களை இந்திய அணி வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. டாஸ் வென்ற அயர்லாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு ரன்கள் எடுத்தது.

அயர்லாந்து சென்றுள்ள இந்திய அணி அணி 3 ஆட்டங்களை கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. டப்ளினில் நடந்து வரும் இந்தப் போட்டியின் முதல் ஆட்டத்தில் இந்தியா 2 ரன் வித்தியாசத்தில் வென்றது. இதன் காரணமாக தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது.

இதையடுத்து 2வது டி20 போட்டி இன்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி ஆரம்பத்தில் தடுமாறினாலும் ருதுராஜ், சாம்சன், ரிங்கு சிங், ஷிவம் துபே ஆகியோர் அதிரடியால் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 185 ரன்கள் எடுத்தது.

இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ருதுராஜ் 58 ரன்களும், சாம்சன் 40 ரன்களும் எடுத்தனர். அயர்லாந்து அணி தரப்பில் மெக்கார்த்தி 2 விக்கெட்டுகளையும் கிரேக் யங் மற்றும் பெஞ்சமின் ஒயிட் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர். இதையடுத்து 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அயர்லாந்து அணி களமிறங்கியுள்ளது.

The post அயர்லாந்து அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் 186 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி appeared first on Dinakaran.

Tags : Ireland ,Dublin ,Dinakaran ,
× RELATED ஐசிசியின் மார்ச் மாதத்திற்கான சிறந்த...