×

மாநில அளவிலான போட்டி விருதுநகர் பள்ளி மாணவர்கள் வெற்றி

விருதுநகர், ஆக. 20: கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு இடையேயான மாநில அளவிலான போட்டிகளில் விருதுநகர் கேந்திரிய வித்யாலயா மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். மாநில அளவில் 52 கேந்திரிய வித்தியாலயா பள்ளிகள் பங்கேற்ற போட்டிகளில் 18 மாணவ, மாணவியர் வெற்றி பெற்றனர். இவர்களில் 12 மாணவ, மாணவியர் தேசிய அளவில் பல்வேறு மாநிலங்களில் நடைபெற உள்ள தேசிய போட்டிகளில் பங்கு பெற உள்ளனர். மாநில அளவில் வெற்றி பெற்ற 18 மாணவ, மாணவியருக்கு பள்ளி முதல்வர் லெட்சுமி நாராயணன் சான்றிதழ், கேடயம் வழங்கி பாராட்டினார். இந்நிகழ்ச்சியில் உடற்கல்வி பயிற்சியாளர் ரிச்சார்டு மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.

The post மாநில அளவிலான போட்டி விருதுநகர் பள்ளி மாணவர்கள் வெற்றி appeared first on Dinakaran.

Tags : Virudhunagar School ,Virudhunagar ,Virudhunagar Kendriya Vidyalaya ,Kendriya Vidyalaya ,Dinakaran ,
× RELATED விருதுநகர் கலெக்டர் ஆபீசில் மஸ்தூர் பணியாளர்கள் மீண்டும் பணி கோரி மனு