×

அல்ட்ரா பொறியியல் கல்லூரியில் மாணவர்களுக்கு பணி ஆணை

மதுரை, ஆக. 20: மதுரையில் உள்ள அல்ட்ரா பொறியியல் மற்றும் தொழில் நுட்பக்கல்லூரியில் நடந்த வேலை வாய்ப்பு முகாமில் பங்கேற்ற மாணவர்களுக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டன. மதுரை அல்ட்ரா பொறியியல் மற்றும் தொழில் நுட்பக்கல்லூரியில் கல்லூரி வேலை வாய்ப்புத்துறை சார்பாக மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு முகாம் சிறப்பாக நடைபெற்றது. இந்த முகாமில் யெஸ் பேங்க் சார்பாக தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பணி ஆணைகளை கல்லூரி தலைவர்
பேராசிரியர் கே.ஆர்.ஆறுமுகம் மற்றும் யெஸ் பேங்க் அதிகாரிகள் கார்த்திகேயன் மற்றும் கூந்தராஜன் ஆகியோரால் வழங்கப்பட்டது. இவ்வேலை வாய்ப்பு முகாம் கல்லூரி வேலை வாய்ப்புத்துறை அதிகாரி ஜெயக்குமார் தலைமையில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

The post அல்ட்ரா பொறியியல் கல்லூரியில் மாணவர்களுக்கு பணி ஆணை appeared first on Dinakaran.

Tags : Ultra Engineering College ,Madurai ,Ultra College of Engineering and Technology ,Ultra College of Engineering ,Dinakaran ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை