×

வீடு வாங்க இஎம்ஐ கட்டுவதில் இந்தியாவில் மிகவும் காஸ்ட்லி சிட்டி மும்பை: அகமதாபாத் மிகவும் சீப்

புதுடெல்லி: இந்தியாவின் மிகவும் விலையுயர்ந்த நகரமாக மும்பையும், வாழ மலிவான நகரமாக அகமதாபாத்தும் உள்ளன. இந்தியாவில் உள்ள நைட் பிராங்க் அக்போர்டு பிலிட்டி இன்டெக்ஸ் என்ற நிறுவனம் மக்கள் தொகை அதிகம் உள்ள ஒரு குறிப்பிட்ட நகரத்தில் உள்ள வீட்டு வசதியின் மாதாந்திர தவணை கட்ட தேவையான நிதி தொடர்பாக ஒரு குடும்பத்திற்குத் தேவைப்படும் வருமானத்தின் விகிதம் அடிப்படையில் நகரங்களை பட்டியலிட்டது. இதில் அகமதாபாத் வாழ மிகவும் மலிவான இந்திய நகரமாகும். வீடு வாங்க அதிக இஎம்ஐ கட்டும் அளவுக்கு மிகவும் விலையுயர்ந்த வீட்டு சந்தை உள்ள நகரம் மும்பை.

மும்பையைப் பொறுத்தவரை, வீட்டுக் கடன் இஎம்ஐ மற்றும் வருமான விகிதம் 55% ஆகும். அதாவது ஒரு சராசரி குடும்பம் கடனில் ஒரு வீட்டைப் பெற வேண்டும் என்றால், வீட்டுக் கடன் இஎம்ஐகளில் அதன் வருமானத்தில் பாதிக்கும் மேல் செலுத்த வேண்டும். அடுத்ததாக, 31% இஎம்ஐக்கு-வருமான விகிதத்துடன் ஐதராபாத் இரண்டாவது மிகவும் விலையுயர்ந்த நகரமாக உள்ளது. மூன்றாவது இடத்தில் டெல்லி உள்ளது. அங்குள்ள மக்கள் தங்கள் வருமானத்தில் 30% வீட்டுக் கடன் இஎம்ஐகளுக்காக செலவிட வேண்டும்.

கர்நாடகா தலைநகரம் பெங்களூரு மற்றும் தமிழ்நாட்டின் சென்னை ஆகியவை தங்கள் வருமானத்தில் 28% வீட்டு கடன் இஎம்ஐ செலவிட 4ம் இடத்தை பிடித்துள்ளன. அடுத்ததாக,26 சதவீதத்துடன் மகாராஷ்டிராவில் உள்ள புனே 5வது இடம் பிடித்துள்ளது. கொல்கத்தாவிற்கும் 5வது இடம் கிடைத்துள்ளது. குஜராத்தில் உள்ள அகமதாபாத் தான் வாழ மிகவும் மலிவான இந்திய நகரம் ஆகும். அங்கு ஒரு சராசரி குடும்பம் தனது வருமானத்தில் 23% வீட்டுக் கடன் இஎம்ஐ செலுத்தினால் போதும்.

The post வீடு வாங்க இஎம்ஐ கட்டுவதில் இந்தியாவில் மிகவும் காஸ்ட்லி சிட்டி மும்பை: அகமதாபாத் மிகவும் சீப் appeared first on Dinakaran.

Tags : Castley City ,Mumbai ,India ,Ahmedabad ,New Delhi ,Knight Frank ,
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 842 புள்ளிகள் சரிவு..!!