×

கார் மோதி அதிமுக ஒன்றிய செயலாளர் பலி

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே மருதாந்தலையைச் சேர்ந்தவர் சாம்பசிவம்(55). மனைவி, 3 மகன்கள் உள்ளனர். இவர் அதிமுக அன்னவாசல் வடக்கு ஒன்றிய செயலாளராக இருந்தார். கந்தர்வக்கோட்டை தொகுதி முன்னாள் எம்எல்ஏ நார்த்தாமலை ஆறுமுகமும், சாம்பசிவமும் மதுரை அதிமுக மாநாட்டுத் திடலுக்கு நேற்று முன்தினம் சென்றிருந்தனர். அங்கிருந்து நள்ளிரவு காரில் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். புதுக்கோட்டை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் முத்துடையான்பட்டியில் காரில் இருந்து இறங்கிய சாம்பசிவம், சாலையைக் கடக்க முயன்றபோது அவ்வழியாக வந்த கார் மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து வெள்ளனூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

The post கார் மோதி அதிமுக ஒன்றிய செயலாளர் பலி appeared first on Dinakaran.

Tags : AIADMK union ,Pudukottai ,Sambasivam ,Maruthanthalai ,Annavasal ,Pudukottai district ,AIADMK Annavasal ,Pali ,
× RELATED நகராட்சிகள், பேரூராட்சிகள், உள்ளாட்சி...