×

மாவட்ட பதிவாளருக்கு அதிகாரம் தரும் சட்ட திருத்தத்தை முன்தேதியிட்டு அமல்படுத்த முடியாது: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: மாவட்ட பதிவாளர்களுக்கு அதிகாரம் வழங்கி பத்திரப்பதிவு சட்டத்தில் கடந்த 2022ம் ஆண்டு திருத்தம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டப் பிரிவின் அடிப்படையில் 2004ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட பத்திரப்பதிவை ரத்து செய்வது தொடர்பாக தென் சென்னை மாவட்ட பதிவாளர் பிறப்பித்த நோட்டீசை எதிர்த்து காஸ்நவி என்பவர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பு வாதத்தை ஏற்ற நீதிபதி, அரசின் சட்டத் திருத்தத்தில் முன்தேதியிட்டு அமல்படுத்துவது தொடர்பாக தெளிவற்ற நிலை உள்ளது. சட்டத் திருத்தம் கொண்டு வருவதற்கு பல ஆண்டுகளுக்கு முன் பதியப்பட்ட பத்திரப்பதிவுகள் குறித்து உரிமையியல் நீதிமன்றங்களில் மட்டுமே நிவாரணம் பெற முடியும். 2004ம் ஆண்டு மேற்கொண்ட பத்திரப் பதிவு குறித்து விசாரிக்க மாவட்ட பதிவாளர் அனுப்பிய நோட்டீஸ் ரத்து செய்யப்படுகிறது என உத்தரவிட்டார்.

The post மாவட்ட பதிவாளருக்கு அதிகாரம் தரும் சட்ட திருத்தத்தை முன்தேதியிட்டு அமல்படுத்த முடியாது: ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : ICourt ,Chennai ,Dinakaran ,
× RELATED திருமணம் செய்யாமல் சேர்ந்து...