×

அதிமுக மாநாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரையில் தேவர் இன கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்

மதுரை: அதிமுக மாநாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரையில் தேவர் இன கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் தேவர் சமூகத்தினர் புறக்கணிக்கப்பட்டதாக ஆர்பாட்டத்தில் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர். மதுரை முனிச்சாலை சந்திப்பில் எடப்பாடி பழனிசாமியை கண்டித்து நூற்றுக்கணக்கானோர் முழக்கங்களை எழுப்பினர்.

தென் மாவட்டங்களுக்கு எடப்பாடி பழனிசாமி வரக் கூடாது என நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டு கண்டன முழக்கம் எழுப்பினர். எடப்பாடி பழனிசாமி அதிமுகவினுடைய பொதுச்செயலாளராக பதவி ஏற்றபின்பு முதல் முறையாக தென் மாவட்டத்தில் தன்னுடைய முழுமையான பலத்தை காமிக்க வேண்டும் என்ற அடிப்படையில் மதுரை விமானம் நிலையம் அருகே நாளை மிகப்பெரிய மாநாட்டுக்கு ஏற்பாடு செய்திருக்கிறார். அதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இதனிடையே எடப்பாடி பழனிசாமி கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் இருந்தபொழுது 10.5 சதவீதத்தை வேறொரு சமூகத்திற்கு வழங்கி அதவும் அவர்களுக்கு வழங்காமல் ஏமாற்றம் செய்துள்ளதாக மேலும் தங்களுடைய சமுதாயத்தை முழுமையாக எந்தவித அரசு சலுகை கிடைக்காமல் ஏமாற்றிவிட்டதாகவும் அதுவே அவர் மதுரைக்கு வரக்கூடாது என கடந்த சில தினங்களாக, எடப்பாடி பழனிசாமி மதுரை வருகை எதிரித்து அங்கங்கே போஸ்டர்கள் ஒட்டப்பட்டு கடுமையான எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதனிடையே இன்று எதிர்ப்பின் உச்சமாக மதுரை முனிச்சாலை சந்திப்பில் பெண்களும், ஆண்களும் தற்போது எடப்பாடி பழனிசாமி மதுரைக்குள் வராதே என்கின்ற முழக்கத்தை முன்வைத்து இந்த போராட்டத்தை நடத்தி வருகின்றார்கள் . குறிப்பாக கடந்த அதிமுக ஆட்சியின் போது இந்த சமுதாயத்தை முழுமையாக ஏமாற்றி அவர்களுக்கு வரக்கூடிய சலுகைகளை வரவிடாமல் செய்து சமூகத்துக்கு முழுமையாக தோரகத்தை விளைவித்திருப்பதாகவும், சமூகத்தை சார்ந்த அமைச்சர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கொடநாடு வழக்கில் குற்றவாளியாக இருக்கும் எடப்பாடி பழனிசாமியை கைது செய்ய வேண்டும் என்றும் அவரகள் போராட்டம் நடத்த வருகின்றனர்.

The post அதிமுக மாநாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரையில் தேவர் இன கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர் appeared first on Dinakaran.

Tags : Devar ethnic confederates ,Madurai ,Edapadi Palanisamy ,
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை