×

கோவை கொடிசியா வளாகத்தில் தொடங்கியுள்ள ஸ்டார்டப் திருவிழா: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் உரை

சென்னை: கோவை கொடிசியா வளாகத்தில் தொடங்கியுள்ள ஸ்டார்ட் அப் திருவிழா குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி மூலம் உரையாற்றினார். கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெறும் விழாவில் சிறு, குறு, நடுத்தர தொழில் முனைவோர், இளம் தொழில் முனைவோர் பங்கேற்றுள்ளனர். அமைச்சர் தா.மோ.அன்பரசன் டி.ஆர் பி.ராஜா, தொழில்துறை உயர் அதிகாரிகள் ஸ்டார்ட் அப் விழாவில் பங்கேற்றுள்ளனர்.

ஸ்டார்ட் அப் திருவிழாவில் 450 அரங்குகள் கொண்டு கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. கோவைதான் தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 50க்கும் மேற்பட்ட வல்லுநர்களுடன் கருத்தரங்கு நடைபெற உள்ளது. அனைவரையும் உள்ளடக்கிய நிலையான வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு அரசு செயல்படுகிறது என முதல்வர் தெரிவித்துள்ளார்.

2300 ஆக இருந்து ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் எண்ணிக்கை தற்போது 3 மடங்காக அதிகரித்துள்ளன என்றும் தெரிவித்துள்ளார். எந்த துறையாக இருந்தாலும் இந்தியாவில் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு திகழ வேண்டும் என்றும் முதலைமச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

The post கோவை கொடிசியா வளாகத்தில் தொடங்கியுள்ள ஸ்டார்டப் திருவிழா: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் உரை appeared first on Dinakaran.

Tags : Coimbatore Coimbatore ,Chief Minister ,M.K.Stal ,Chennai ,M.K.Stalin ,Coimbatore Kodisia ,Coimbatore… ,
× RELATED வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்...