×

விழுப்புரம் மாவட்டம் முட்டத்தூர் கிராமத்தில் குல்பி ஐஸ் சாப்பிட்டு 85 பேர் உடல்நலம் பாதிப்பு: ஒருவர் கைது

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் முட்டத்தூர் கிராமத்தில் குல்பி ஐஸ் சாப்பிட்டு 85 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. குல்பி ஐஸ் சாப்பிட்ட 50 பள்ளி சிறுவர், சிறுமிகள் உட்பட 85 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டு நள்ளிரவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருசக்கர வாகனத்தில் குல்பி ஐஸ் விற்ற கண்ணன் என்பவரை கஞ்சனூர் போலீஸ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குல்பி ஐஸ் சாப்பிட்ட 50 குழந்தைகள் உள்பட 85 பேருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி ஒன்றியத்துக்குள்பட்ட முட்டத்தூர் கிராமம் உள்ளது. இங்கு நேற்று மாலை மொபெட்டில் வந்தவரிடம் சிறுவர், சிறுமிகள் குல்பி ஐஸ் வாங்கி சாப்பிட்டனர். இதைத் தொடர்ந்து இரவு 10 மணிக்கு ஐஸ் சாப்பிட்ட சிறுவர்களுக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. மேலும் வயிற்றுப்போக்கும் இருந்தது. இந்த சிறுவர்கள் அடுத்தடுத்து மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

3 வயது முதல் 15 வயதுக்குள்பட்ட மொத்தம் 50 சிறுவர்கள் உள்பட 85 பேருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்த வருகிறார்கள். குல்பி ஐஸில் ஏதேனும் மயக்க மருந்து கலந்துள்ளதா அல்லது கெட்டு போன ஐஸை குழந்தைகளுக்கு கொடுத்தனரா என விசாரணை நடத்தி வருகிறார்கள். குல்பி ஐஸ் விற்பனை செய்த மர்மநபரை போலீஸார் தேடி வந்த நிலையில் கண்ணன் என்பவரை கஞ்சனூர் போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post விழுப்புரம் மாவட்டம் முட்டத்தூர் கிராமத்தில் குல்பி ஐஸ் சாப்பிட்டு 85 பேர் உடல்நலம் பாதிப்பு: ஒருவர் கைது appeared first on Dinakaran.

Tags : Gulby Ice ,Viluppuram district ,Muttattur village ,Viluppuram ,Gulpie Ice ,Gulby ,
× RELATED கரும்பு விவசாயத்திற்கு பெயர்போன...