×

தமிழகத்தில் பரவலாக பெய்யும் தொடர் மழை!: பொதுப்பணித்துறை பராமரிப்பில் உள்ள 4,517 பாசன ஏரிகள் நிரம்பின..!!

சென்னை: தமிழ்நாட்டில் பரவலாக பெய்யும் கனமழையால் பொதுப்பணித்துறையின் பராமரிப்பில் உள்ள 4,517 பாசன ஏரிகள் நிரம்பின. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் அணைகள், நீர்த்தேக்கங்கள், பாசன ஏரிகள், குளங்கள் நிரம்பி வருகின்றன. இதன் காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.* தமிழ்நாட்டில் 2,692 பாசன ஏரிகள் 76 சதவீதம் முதல் 99 சதவீதம் வரை முழு கொள்ளளவை எட்டி நிரம்பியுள்ளன.* 2,163 பாசன ஏரிகள் 76 சதவீதம் முதல் 99 சதவீதம் வரை நிரம்பியுள்ளன; 2,163 ஏரிகள் 26 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை கொள்ளளவை எட்டியுள்ளது. * செங்கல்பட்டு மாவட்டத்தில் மொத்தமுள்ள 564 ஏரிகளில் 344 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி 100 சதவீதம் நிரம்பியுள்ளது. * மதுரை மாவட்டத்தில் மொத்தமுள்ள 1,340 ஏரிகளில் 577 ஏரிகள் நிரம்பி மறுகால் பாய்கின்றன. * புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தமுள்ள 1,131 ஏரிகளில் 268 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. * தென்காசி மாவட்டத்தில் மொத்தமுள்ள 543 ஏரிகளில் 340 ஏரிகள் 100 சதவீதம் நிரம்பி மறுகால் பாய்கின்றன.* தஞ்சை மாவட்டத்தில் மொத்தமுள்ள 640 ஏரிகளில் 429 ஏரிகள் முழுவதும் நிரம்பியுள்ளன. * திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தமுள்ள 578 ஏரிகளில் 248 ஏரிகள் நிரம்பியுள்ளன; திருவண்ணாமலையில் 335 ஏரிகள் 100 சதவீதம் நிரம்பின. * விழுப்புரம் மாவட்டத்தில் 507 ஏரிகளில் 273 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி 100 சதவீதம் நிரம்பின. * திருப்பூர் – 5, விருதுநகர் – 4, திருவாரூர் – 4, ஈரோடு – 3, தருமபுரி – 2, கரூர் – 1 பாசன ஏரிகள் மட்டுமே முழுவதும் நிரம்பின. *  குமரி மாவட்டத்தில் மொத்தமுள்ள 2,040 ஏரிகளில் 344 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி 100 சதவீதம் நிரம்பியுள்ளன. …

The post தமிழகத்தில் பரவலாக பெய்யும் தொடர் மழை!: பொதுப்பணித்துறை பராமரிப்பில் உள்ள 4,517 பாசன ஏரிகள் நிரம்பின..!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Public Works Department ,CHENNAI ,Northeast Monsoon ,
× RELATED ஊராட்சி தலைவரின் கணவர் மீது காவல் நிலையத்தில் புகார்