×

திருச்சி பாரதிதாசன் பல்கலை. பேரவை தேர்தலில் செனட் உறுப்பினராக சிஇஓ நேர்முக உதவியாளர் தேர்வு

பெரம்பலூர்,ஆக.19: திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பேரவை தேர்தலில்- செனட் உறுப்பினர் பதவி இடத்திற்கு பெரம்பலூர் மாவட்டத்தின் சார்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் (மேல்நிலை) சுரேஷ் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டார். திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழக எல்லைக்கு உட்பட்ட திருச்சி,கரூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய 8வருவாய் மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களிடம் இருந்து, மாவட்டத்திற்கு ஒருவர் வீதம் செனட் உறுப் பினர் பதவிக்குத் தேர்வு செய்வதற்காக,பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் 45 மேல்நிலைப் பள்ளிகளை சேர்ந்த தலைமை ஆசிரியர்களில் ஒருவரை தேர்வுசெய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.

இதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் தலைமை ஆசிரியர் பணியிடத்திற்கு இணையான, மாவட்ட முதன்மை முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளராக,(மேல்நிலை) பணிபுரிந்து வரும் சுரேஷ் என்பவர் திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழக செனட் உறுப்பினராகப் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவருக்கு மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மணிவண்ணன் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள், அனைத்துப் பள்ளிகளின் தலைமைஆசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கள், சிஇஓ அலுவலகக் கண்காணிப்பாளர்கள், அலுவலர் கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

The post திருச்சி பாரதிதாசன் பல்கலை. பேரவை தேர்தலில் செனட் உறுப்பினராக சிஇஓ நேர்முக உதவியாளர் தேர்வு appeared first on Dinakaran.

Tags : Trichy Bharathidasan University ,Senate ,Perambalur ,Tiruchi Bharathidasan University Council ,Dinakaran ,
× RELATED தேர்தல் நடத்தை விதிகளை பின்பற்றி...