×

வெள்ளம், நிலச்சரிவு, மின்னல் தாக்கி 2038 பேர் பலி: ஒன்றிய உள்துறை தகவல்

புதுடெல்லி: இந்தாண்டு பெய்த பருவமழையில் வெள்ளம்,நிலச்சரிவு மற்றும் மின்னல் தாக்கி 2038 பேர் பலியாகியுள்ளனர். இதுகுறித்து ஒன்றிய உள்துறை அமைச்சகம் தயாரித்துள்ள தரவுகளின்படி, கடந்த ஏப்ரல் 1ம் தேதியில் இருந்து ஆகஸ்ட் 17ம் தேதி வரை நாடு முழுவதும் பருவ மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 101 பேர் மாயமாகியுள்ளனர்.1,584 பேர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவங்களில் மொத்தம் 335 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன. இதில் அதிகபட்சமாக மபியில் 40 மாவட்டங்கள், அசாமில் 30 , உபியில் 27 மாவட்டங்கள் உள்ளன.

இமாச்சல் பிரதேசத்தில் 12 மாவட்டங்களும், உத்தரகாண்டின் 7 மாவட்டங்களும் வெள்ளம், நிலச்சரிவால் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. வெள்ளத்துக்கு 892 பேரும், மின்னல் தாக்கி 506 பேர்,நிலச்சரிவில் சிக்கி 186 பேரும் பலியாகியுள்ளனர். பருவமழையின் போது வேறு பல காரணங்களால் 454 பேர் இறந்துள்ளனர்.அதிகளவாக பீகாரில் 518 பேரும், இமாச்சலில் 332 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரியவந்துள்ளது.

The post வெள்ளம், நிலச்சரிவு, மின்னல் தாக்கி 2038 பேர் பலி: ஒன்றிய உள்துறை தகவல் appeared first on Dinakaran.

Tags : Union Interior ,New Delhi ,Indian monsoon ,Ministry of Interior of the Union ,
× RELATED அரியானா பாஜக அரசு உத்தரவு; ‘ஹரிஜன்’,...