×

ரீல்சுக்காக போதையில் ரகளை இந்து மகா சபா நிர்வாகி கைது: பேரிகார்டுகளை இடித்து தள்ளிய வீடியோவை வெளியிட்டு சிக்கினார்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை பே கோபுரம் 11வது தெருவைச் சேர்ந்தவர் கோவிந்தன் மகன் வாசுதேவன்(36). இந்து மகா சபா மாவட்ட தலைவர். இவர் சமூக வலைதளத்தில் தனது வீடியோக்களை பதிவேற்றுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அதற்காக, நேற்று முன்தினம் இரவு மது போதையில் பைக்கில் திருவண்ணாமலையில் அதிவேகத்தில் வலம் வந்த வாசுததேவன் அதனை நண்பர்கள் மூலம் வீடியோ பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவை ‘கெத்தா நடந்து வரான், கேட்டை எல்லாம் கடந்து வரான், மரணம் மாசு மரணம், டப்பு தரணும்’ எனும் பாடல் பின்னணியில் சமூக வலைதளத்தில் பதிவேற்றியுள்ளார்.

அதில், திருவண்ணாமலை பே கோபுரம் சாலை பகுதியில் அதிவேகமாக பைக்கில் சென்று, அங்கு போக்குவரத்து சீரமைப்புக்காக வைத்திருந்த பேரிகார்டு மீது மோதி நிலைத்தடுமாறி கீழே விழுகிறார். அங்கிருந்து எழுந்துச்சென்று அந்த பகுதியில் இருந்த சாலை தடுப்புகளை உதைத்து கீழே தள்ளி சேதப்படுத்தியுள்ளார். இந்த வீடியோ வைரலாக பரவியது. இதைத்தொடர்ந்து இந்த அத்துமீறலில் ஈடுபட்டவரை கைது செய்ய எஸ்பி கார்த்திகேயன் உத்தரவிட்டார்.
அதன்பேரில், திருவண்ணாமலை டவுன் டிஎஸ்பி குணசேகரன் தலைமையிலான போலீசார், சாலையில் அத்துமீறலில் ஈடுபட்டு ரீல்ஸ் வீடியோ வெளியிட்ட, வாசுதேவனை நேற்று கைது செய்தனர்.

நெற்றியில் பட்டை, காவி உடை என பகல் முழுவதும் பக்திப்பெருக்காக வலம் வரும் வாசுதேவன், இரவில் மது போதையில் இதுபோன்ற அத்துமீறலில் ஈடுபடுவது விசாரணையில் தெரியவந்தது. சமூக வலைதளத்தில் லைக் மற்றும் கமென்ட் கிடைக்கும் என்ற ஆசையில் வீடியோ எடுத்ததாக தெரிவித்துள்ளார். தொடர்ந்து, பொது சொத்துக்களை சேதப்படுத்தியது, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post ரீல்சுக்காக போதையில் ரகளை இந்து மகா சபா நிர்வாகி கைது: பேரிகார்டுகளை இடித்து தள்ளிய வீடியோவை வெளியிட்டு சிக்கினார் appeared first on Dinakaran.

Tags : Hindu Mahasabha ,Tiruvannamalai ,Govindan ,Vasudevan ,Thiruvannamalai Bay Gopuram 11th Street ,Hindu Maha Sabha District ,President.… ,Hindu Maha Sabha ,
× RELATED தொல்லியல் துறை அலுவலர் மீது நடவடிக்கை கோரி மனு வேலூர் கோட்டை