×

கார்கிலில் குண்டுவெடிப்பு 3 பேர் பலி, 11 பேர் படுகாயம்

ஸ்ரீநகர்: லடாக் யூனியன் பிரதேசத்தில் உள்ள கார்கிலில் நடந்த குண்டுவெடிப்பில் 3 பேர் உயிரிழந்தனர். ஜம்மு காஷ்மீரில் இருந்து பிரிக்கப்பட்ட லடாக் யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று அங்கு நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில்,‘‘ கார்கில் மாவட்டம் டிராஸ் பகுதியில் உள்ள காயலான் கடையில் நேற்று மாலையில் சந்தேகத்துக்குரிய மர்ம பொருள் வெடித்து சிதறியதில் 3 பேர் பலியாயினர். 11 பேர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்’’ என்றனர்.

The post கார்கிலில் குண்டுவெடிப்பு 3 பேர் பலி, 11 பேர் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Kargil ,Srinagar ,Union Territory ,Ladak ,Jammu ,Kashmir ,Dinakaran ,
× RELATED லடாக்கில் நேற்றிரவு நிலநடுக்கம்