×

நாட்டிலேயே முதல்முறையாக பெங்களூருவில் 3டி தொழில்நுட்பத்தில் 45 நாளில் கட்டப்பட்ட தபால் நிலையம்

பெங்களூரு: பெங்களூருவில், 3டி தொழில் நுட்பத்தில் அமைக்கப்பட்ட இந்தியாவின் முதல் அஞ்சல் துறை அலுவலக கட்டிடத்தை ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் திறந்து வைத்தார். பெங்களூரு, கேம்ப்ரீஜ் லே அவுட்டில் தபால் அலுவலகம் 3டி நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி அமைக்கப்பட்டுள்ளது. 45 நாளில் கட்டி முடிக்கப்பட்ட தபால் அலுவலகத்தை டெல்லியில் இருந்து ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் திறந்து வைத்து கூறுகையில், ‘3டி தொழில் நுட்பத்தை பயன்படுத்தி இந்த கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

இந்த யுக்தி மிகவும் சிறப்பானதாகும். நவீன 3 டி தொழில் நுட்பத்தை பயன்படுத்தி இது போன்ற கட்டிடங்களை அமைப்போம் என்பதையும் யாரும் நினைத்து பார்த்து இருக்கமாட்டார்கள். ஒட்டுமொத்த கட்டிட பணிகளும் 45 நாளில் முடிக்கப்பட்டு தபால் அலுவலகம் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது. சாதாரண முறையில் இந்த கட்டிடம் கட்டுவதற்கு 6 முதல் 8 மாதம் ஆகலாம். 3 டி தொழில் நுட்பத்தினால் மிகவும் விரைவாகவும் தரமாகவும் இந்த கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது’ என்றார்.

The post நாட்டிலேயே முதல்முறையாக பெங்களூருவில் 3டி தொழில்நுட்பத்தில் 45 நாளில் கட்டப்பட்ட தபால் நிலையம் appeared first on Dinakaran.

Tags : India ,Bengaluru ,Union Minister ,Ashwini ,
× RELATED பாதிப்புகள் சரிசெய்யப்பட்டு...