×

ஆவடி – பாலாஜி நகர் வழிதடத்தில் சிரஞ்சீவி நகரில் புதிய பேருந்து நிறுத்தம்: நாசர் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

ஆவடி: ஆவடி முதல் பாலாஜி நகர் வரையிலான வழித்தடத்தில் சிரஞ்சீவி நகரில் புதிய பேருந்து நிறுத்தத்தை ஏற்படுத்தி ஆவடி நாசர் எம்எல்ஏ தொடங்கி வைத்தார். ஆவடியில் இருந்து சேக்காடு பாலாஜி நகர் வரை ஏற்கெனவே பேருந்து வழித்தடம் உள்ளது. இதில் பயணிக்கும் எஸ்48 மினிபஸ்ஸை, அருகில் உள்ள சீரஞ்சீவி நகர் வழியாக சுற்றிச் செல்லும் வகையில் வழித்தடத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்று சட்டமன்ற உறுப்பினர் நாசரிடம் சிரஞ்சீவி நகர் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து, எஸ்48 பேருந்து வழித்தடம் ஆவடி முதல் பாலாஜி நகர் வழியாக சிரஞ்சீவி நகர் செல்லும் வகையில் நாசர் எம்எல்ஏ அதன் துறை சார்ந்த அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை
எடுத்தார். அதன் படி ஆவடி முதல் பாலாஜி நகர் வழியாக சிரஞ்சீவி நகர் வரை செல்லும் வகையில் மாற்றியமைக்கப்பட்ட எஸ்48 மினிபஸ் வழித்தட துவக்க விழா நடைபெற்றது. இதனை ஆவடி சட்டமன்ற உறுப்பினர் சா.மு.நாசர், பகுதி செயலாளர் நாராயண பிரசாத், கலந்து கொண்டு கொடியசைத்து பேருந்து பயணத்தை துவக்கி வைத்தார். இதற்கு முன்னதாக பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனருக்கு கைகடிகாரம் வழங்கியும் மற்றும் பூக்களை தூவி பேருந்தை வரவேற்றார்.

The post ஆவடி – பாலாஜி நகர் வழிதடத்தில் சிரஞ்சீவி நகரில் புதிய பேருந்து நிறுத்தம்: நாசர் எம்எல்ஏ தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Chiranjeevi Nagar ,Aavadi – Balaji Nagar ,Nasser ,MLA ,Aavadi ,Nazar ,Balaji Nagar ,Nasser MLA ,Dinakaran ,
× RELATED நெமிலிச்சேரி ஊராட்சியில் ரூ.35 லட்சம்...