×

ஹோண்டா எஸ்பி 160

ஹோண்டா நிறுவனம் புதிய எஸ்பி 160 பைக்கை அறிமுகம் செய்துள்ளது. இதில் 162 சிசி இன்ஜின் இடம் பெற்றுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 13.5 எச்பி பவரையும், 14.6 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 160 சிசி இன்ஜின் பிரிவில் ஏற்கெனவே யூனிகான், எக்ஸ் பிளேடு ஆகிய பைக்குகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த வரிசையில் ஹோண்டா நிறுவனம் வெளியிடும் 3வது பைக் இது.

யூனிகார்னில் உள்ள இன்ஜின்தான் எஸ்பி 160யிலும் இடம் பெற்றுள்ளது. யூனிகார்ன் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருந்தாலும் எல்இடி டிசி ஹெட்லைட்டுகள், ஸ்போர்ட்டி கிராபிக்ஸ், ஸ்பிளிட் அலாய் வீல், குராம் மப்ளர், எட்ஜ் டெயில் லேம்ப் என அசத்தலாக வடிவமைக்கப்பட்டுள்ளது. யூனிகார்னில் 13 லிட்டர் பெட்ரோல் டேங்க், 139 கிலோ எடை, 18 அங்குல அலாய் வீல்கள் உள்ளன. ஆனால் எஸ்பி 160ல் 12 லிட்டர் டேங்க், 141 கிலோ எடை, 17 அங்குல வீல்கள் இடம் பெற்றுள்ளன. ஷோரூம் விலையாக ஒரு டிஸ்க் பிரேக் கொண்டது சுமார் ரூ.1,17,500 எனவும், டூயல் டிஸ்க் பிரேக் கொண்டது ரூ.1,21,900 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

The post ஹோண்டா எஸ்பி 160 appeared first on Dinakaran.

Tags : Honda ,Dinakaran ,
× RELATED தினகரன் மற்றும் சென்னை VIT இணைந்து நடத்தும் கல்வி கண்காட்சியில்…