×

ராஜஸ்தானின் கோட்டாவில் நடப்பாண்டு 22 மாணவர் தூக்கிட்டு தற்கொலை: பயிற்சி மைய தங்கும் விடுதிகளில் மின்விசிறியில் ஸ்ப்ரிங் பொருத்தம்

 

ராஜஸ்தான்: ராஜஸ்தானில் நீட், ஜே ஈஈ தேர்வு பயிற்சி பெரும் மாணவர்கள் தற்கொலையை தடுப்பதற்காக அவர்கள் தங்கியுள்ள விடுதி அறையின் மின்விசிறியில் ஸ்ப்ரிங் பொறுத்தப்படுவது கடும் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் செயல்படும் நீட், ஜே ஈஈ நுழைவு தேர்வு பயிற்சி மையங்கள் நாடு தழுவிய அளவில் பிரபலமானவை இதனால் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவர்களும் இங்கு வந்து நுழைவு தேர்வுகளுக்கு பயிற்சி பெறுகின்றனர்.

அதே நேரத்தில் நீட் உள்ளிட்ட நுழைவு தேர்வுகளுக்காக பலமணிநேரம் தொடர்ந்து படித்தால் உள்ளிட்ட காரணங்களால் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதும் அடிக்கடி நடக்கிறது. இந்த ஆண்டில் மட்டும் கோட்டா மாவட்டத்தில் நுழைவு தேர்வுக்கு பயிற்சி பெற்ற 22 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டனர். குறிப்பாக கடந்த 18 நாட்களில் 4 பேர் தூக்கிட்டு தற்கொலை செய்ததால் அதனை தடுக்கும் வகையில் கோட்டா மாவட்ட நிர்வாக மாணவர்கள் தங்கியுள்ள விடுதிகளில் மின்விசிறிகளில் ஸ்ப்ரிங் பொறுத்த உத்தரவிட்டுள்ளது.

அதன்படி பல்வேறு விடுதி அறைகளில் ஸ்ப்ரிங் பொருத்தும் பணியும் மும்முரமாக நடைபெறுகிறது. நீட், ஜே ஈஈ உள்ளிட்ட நுழைவு தேர்வுக்கு பயிற்சி பெரும் மாணவர்கள் தற்கொலைக்கு மன அழுத்தமே பிரதான காரணமாக கூறப்படும் நிலையில் அதனை தடுக்க நடவடிக்கை எடுக்காமல் மின் விசிறிகளில் ஸ்ப்ரிங் பொறுத்தப்படுவது கடும் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது.

மாணவர்கள் தற்கொலை முடிவுகளுக்கான உண்மையான காரணத்தை கண்டறிந்து தடுக்க பயிற்சி மையங்கள் தயாராக இல்லை என்பதையே இந்த நடவடிக்கை காட்டுவதாக சமூக வலைத்தளங்களில் பலரும் கூறியுள்ளனர். மின்விசிறிகளில் ஸ்ப்ரிங் பொருத்துவதன் மூலம் நுழைவு தேர்வு பயிற்சி நடத்துவோரின் உண்மையான மனநிலை வெளிப்படுவதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

The post ராஜஸ்தானின் கோட்டாவில் நடப்பாண்டு 22 மாணவர் தூக்கிட்டு தற்கொலை: பயிற்சி மைய தங்கும் விடுதிகளில் மின்விசிறியில் ஸ்ப்ரிங் பொருத்தம் appeared first on Dinakaran.

Tags : Kota, Rajasthan ,Rajasthan ,JEE ,Dinakaran ,
× RELATED மோடியின் வெறுப்பு பேச்சு தேர்தல் ஆணையம் விசாரணை