×

எர்ணாகுளம்-வேளாங்கண்ணி, கொல்லம்-திருப்பதி இடையே புதிய விரைவு ரயில் அறிமுகம்: ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு

சென்னை: எர்ணாகுளம்-வேளாங்கண்ணி, கொல்லம்-திருப்பதி இடையே புதிய விரைவு ரயில் இயக்கப்படும் என்று ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி இடையே புதிய ரயில் அறிமுகம்

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி இடையே புதிய விரைவு ரயில் இயக்கப்படும் என்று ரயில்வே அறிவித்துள்ளது. எர்ணாகுளத்துக்கு திங்கள், சனிக்கிழமை மற்றும் வேளாங்கண்ணிக்கு செவ்வாய், ஞாயிற்றுக்கிழமையும் ரயில் இயக்கப்படும். எர்ணாகுளத்தில் இருந்து பகல் 12.35 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் காலை 5.50 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும். வேளாங்கண்ணியில் இருந்து மாலை 6.30 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் பகல் 12 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும். செங்கோட்டை, ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர், காரைக்குடி, திருவாரூர், நாகை வழியாக வேளாங்கண்ணி செல்லும். முதல்கட்டமாக 14 பெட்டிகளுடன் புதிய ரயில் இயக்கப்படும் என ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.

கொல்லம்-திருப்பதி இடையே புதிய ரயில் அறிமுகம்

கேரள மாநிலம் கொல்லத்தில் இருந்து ஆந்திர மாநிலம் திருப்பதிக்கு புதிய ரயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பதியில் இருந்து செவ்வாய், வெள்ளி மற்றும் கொல்லத்தில் இருந்து புதன், சனிக்கிழமை ரயில் இயக்கப்படும். செங்கனூர், எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, கோவை, ஈரோடு, சேலம், காட்பாடி, சித்தூர் வழியாக ரயில் திருப்பதி செல்லும்.

பாலக்காடு-நெல்லை ரயில் தூத்துக்குடி வரை நீட்டிப்பு

பாலக்காடு-நெல்லை பாலருவி விரைவு ரயில் தூத்துக்குடி வரை நீட்டிக்கப்படும் என்று ரயில்வே அறிவித்துள்ளது. மயிலாடுதுறை-திருச்சி, திருச்சி-கரூர், சேலம்-கரூர் பயணிகள் ரயில், மயிலாடுதுறை-சேலம் விரைவு ரயிலாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மயிலாடுதுறை-சேலம் இடையே விரைவு ரயிலாக இயக்கப்படும் என்று ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.

The post எர்ணாகுளம்-வேளாங்கண்ணி, கொல்லம்-திருப்பதி இடையே புதிய விரைவு ரயில் அறிமுகம்: ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Ernakulam- ,Velankani ,Kollam- ,Tirupati ,Ministry of Railways ,Chennai ,Ernakulam ,Velanganni ,Kollam-Tirupati ,Agricannee ,Vrakandani ,
× RELATED சென்னையிலிருந்து கொல்லம் விரைவு...