×

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்; ஜோகோவிச், கோகோ காப் கால்இறுதிக்கு தகுதி.! ஜெசிகா பெகுலா அதிர்ச்சி தோல்வி

சின்சினாட்டி:அமெரிக்காவில் சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இன்று அதிகாலை நடந்த 3வது சுற்று போட்டியில் அமெரிக்காவின் 19 வயதான கோகோ காப், 18 வயதான செக்குடியரசின் லிண்டா நோஸ்கோவாவுடன் மோதினார். இதில் 6-4, 6-0 என கோகோ காப் வெற்றிபெற்று கால்இறுதிக்குள் நுழைந்தார். மற்றொரு போட்டியில் 2ம் நிலை வீராங்கனையான பெலாரசின் 25 வயதான அரினா சபலென்கா, 6-3, 6-3 என்ற நேர் செட்டில் ரஷ்யாவின் டாரியா கசட்கினாவை வென்று கால் இறுதிக்கு தகுதி பெற்றார்.

துனிசியாவின் ஓன்ஸ் ஜபீர்-குரோஷியாவின் டோனா வெக்கிச் மோதிய போட்டியில் முதல் செட்டில் ஜபீர் 5-2 என முன்னிலையில் இருந்தபோது வெக்கிச் காயத்தால் வெளியேற ஜபீர் கால்இறுதிக்குள் நுழைந்தார். செக்குடியரசின் கரோலினா முச்சோவா, கிரீஸ் நாட்டின் மரியா சக்கரியையும், செக் குடியரசின் மார்கெட்டா வோண்ட்ரூசோவா, அமெரிக்காவின் ஸ்லோன் ஸ்டீபன்சையும் வீழ்த்தி கால்இறுதிக்குள் நுழைந்தனர்.3ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, 4-6, 0-6 என செக்குடியரசின் மேரி பௌஸ்கோவாவிடம் தோல்வி அடைந்து வெளியேறினார்.

மற்றொரு போட்டியில் கஜகஸ்தானின் எலினா ரைபகினா, இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினியுடன் மோதினார். இதில் முதல் செட்டை 6-4 என ரைபகினா கைப்பற்றிய நிலையில், 2வது செட்டில் 2-5 என பின்தங்கி இருந்தபோது காயத்தால் வெளியேற ஜாஸ்மின் கால்இறுதிக்குள் நுழைந்தார். ஆடவர் ஒற்றையரில் நம்பர் 1 வீரரான கார்லோஸ் அல்கராஸ், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ், போலந்தின் ஹூபர்ட் ஹர்காக்ஸ், அமெரிக்காவின் டெய்லர் ஃபிரிட்ஸ் ஆகியோரும் கால்இறுதிக்கு தகுதி பெற்றனர். செர்பியாவின் ஜோகோவிச் 6-3, 6-2 என பிரான்சின் கேல் மோன்ஃபில்சை வென்று கால்இறுதிக்குள் நுழைந்தார்.

The post சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்; ஜோகோவிச், கோகோ காப் கால்இறுதிக்கு தகுதி.! ஜெசிகா பெகுலா அதிர்ச்சி தோல்வி appeared first on Dinakaran.

Tags : Cincinnati Open Tennis ,Djokovic ,Koko Cop ,Jessica Pegula ,Cincinnati ,Cincinnati Open ,USA ,Dinakaran ,
× RELATED அல்கராஸ் மீண்டும் சாம்பியன்: பைனலில் ஜோகோவிச்சை வீழ்த்தினார்