×

புதுச்சேரி அருகே செங்கழுநீர் அம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்: வீராம்பட்டினம் மீனவ கிராமத்தில் பல ஆயிரம் பக்தர்கள் வழிபாடு

புதுச்சேரி: புதுச்சேரி அருகே செங்கழுநீர் அம்மன் கோயில் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் பல ஆயிரம் மீனவ கிராம மக்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர். புதுச்சேரி அடுத்த வீராம்பட்டினம் கிராமத்தில் சுமார் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த செங்கழுநீர் அம்மன் கோயில் உள்ளது. ஆண்டுதோறும் இக்கோயிலில் ஆடி ஐந்தாவது வெள்ளிக்கிழமை தேரோட்டம் வெகுவிமர்சையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான ஆடி தேரோட்டம் கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

நாள்தோறும் அம்மன் வீதிஉலா வந்த நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வெகுவிமர்சையாக நடைபெற்றது. துணை நிலை ஆளுநர் தமிழிசை, முதலமைச்சர் ரெங்கசாமி உள்ளிட்டோர் பங்கேற்று தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். செங்கழுநீர் அம்மன் கோயில் தேரோட்டத்தில் வீராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த பல ஆயிரம் கிராம மக்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். தேர் திருவிழாவையொட்டி புதுச்சேரியில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

The post புதுச்சேரி அருகே செங்கழுநீர் அம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்: வீராம்பட்டினம் மீனவ கிராமத்தில் பல ஆயிரம் பக்தர்கள் வழிபாடு appeared first on Dinakaran.

Tags : Sengalunir ,Amman temple ,Puducherry ,Veerambattinam ,Sengaluneer ,Sengalunir Amman Temple ,Chariot Kolagalam ,
× RELATED மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில்...