×

குமரி மாவட்டத்தில் சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கடன் திட்ட முகாம் கலெக்டர் தகவல்

நாகர்கோவில், ஆக.18: குமரி மாவட்ட கலெக்டர் தர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மற்றும் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் கடன் திட்டங்களான தனிநபர் கடன், சுயஉதவி குழுக்களுக்கான சிறு தொழில் கடன், கைவினை கலைஞர்களுக்கு கடன் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தினை சிறுபான்மையினர் மக்கள் அறிந்து கடன் பெற்று வாழ்க்கை தரத்தை முன்னேற்றும் வகையில் கடன் விண்ணப்பங்கள் பெறுவதற்கான சிறப்பு முகாம்கள் விளவங்கோடு தாலுகா அலுவலகத்தில் ஆகஸ்ட் 22ம் தேதி அன்றும், திருவட்டார் தாலுகா அலுவலகத்தில் ஆகஸ்ட் 23ம் தேதி அன்றும், கிள்ளியூர் தாலுகா அலுவலகத்தில் ஆகஸ்ட் 24ம் தேதி அன்றும், கல்குளம் தாலுகா அலுவலகத்தில் 25ம் தேதி அன்றும், தோவாளை தாலுகா அலுவலகத்தில் ஆகஸ்ட் 31ம் தேதி அன்றும் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். சிறப்பு முகாம்களில் இத்திட்டத்தின் கீழ் கடன்பெற விண்ணப்பங்கள் அளிக்கலாம். தனிநபர் கடனுக்கு விண்ணப்பிக்கும்போது சாதிச்சான்று, வருமானச்சான்று, இருப்பிடச்சான்று, ஆதார் அட்டை நகல், தொழில் திட்ட அறிக்கை, கூட்டுறவு வங்கி புத்தக நகல் மற்றும் கல்வி கடனுக்கு விண்ணப்பிக்கும்போது பள்ளி மாற்று சான்றிதழ், உண்மை சான்றிதழ் மற்றும் மதிப்பெண் சான்றிதழ் ஆகிய ஆவணங்கள் சமர்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post குமரி மாவட்டத்தில் சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கடன் திட்ட முகாம் கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Kumari District ,Nagercoil ,Kumari District Collector ,Tamilnadu Minorities Economic Development Corporation ,Dinakaran ,
× RELATED கன்னிப்பூ சாகுபடிக்கு அணைகள்...